நைட் ரைடர்ஸ் சிக்ஸர்மழை! 104 ரன் விளாசிய வீரர்..ஆனாலும் தோல்வி(வீடியோ)
மேஜர் லீக் போட்டியில் வாஷிங்டன் அணிக்கு எதிராக ஆந்த்ரே ப்ளெட்சர் அதிரடி சதம் விளாசினார்.
ஆந்த்ரே ப்ளெட்சர் அதகளம்
டல்லாஸில் நடந்த மேஜர் லீக் டி20 போட்டியில், வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
Andre Fletcher’s maximum was effortless, smashing the ball a whopping 338ft (103m). He and SFU’s Jake Fraser-McGurk now hold the #1 spot for longest six of the 2025 MLC season. ☄️#NTTSixDistanceTracker | @NTTData pic.twitter.com/XPVJ74MTZw
— Cognizant Major League Cricket (@MLCricket) June 27, 2025
முதலில் ஆடிய நைட் ரைடர்ஸ் அணியில் உன்முக்த் சந்த் 41 (30) ஓட்டங்கள் எடுத்து வெளியேற, ரூதர்போர்டு 20 (11) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிக்ஸர் மழைபொழிந்த ஆந்த்ரே ப்ளெட்சர் (Andre Fletcher) சதம் விளாசினார். அவர் 60 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் குவித்து ரிட்டையர் ஹர்ட் பெற்று வெளியேறினார்.
வாஷிங்டன் த்ரில் வெற்றி
ஆந்த்ரே ரஸல் 13 பந்துகளில் 30 ஓட்டங்களும், ஹோல்டர் 11 (6) ஓட்டங்களும் விளாச, நைட் ரைடர்ஸ் 213 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய வாஷிங்டன் அணி 20 ஓவரில் 21 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Andre Fletcher goes beast mode in MLC 2025! 💥🔥
— Cricket Impluse (@cricketimpluse) June 27, 2025
A sensational century against Washington Freedom — fireworks all around the park! 💯🎇#AndreFletcher #MLC2025 #LAKRvsWF pic.twitter.com/DOJNhGXLkg
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |