உடல் அளவில் அந்த நபரால் காயமடைந்தேன்..! முக்கிய பிரபலம் மீது நடிகை ஆண்ட்ரியா குற்றச்சாட்டு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா, "பிரபலம் ஒருவரால் மனதளவிலும், உடல் அளவிலும் காயப்பட்டேன்" என தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நடிகை ஆண்ட்ரியா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில், தனித்துவமான கதையமைப்பை தேர்ந்தெடுப்பது, துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிப்பது என தனது திறமை தொடர்ந்து வெளிகாட்டி வரும் ஆண்ட்ரியா, மிகச் சிறந்த பின்னணி பாடகியாகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
Andrea Jeremiah- ஆண்ட்ரியா ஜெரேமியா(Instagram)
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா பிரபலமடைந்தார்.
இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வட சென்னை, கமலின் விஸ்வரூபம் 1 மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் ஆண்ட்ரியாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
உடல் அளவில் பாதிக்கப்பட்டேன்
இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த ஆண்ட்ரியா, கொரோனா தொடங்கியதில் இருந்து திடீர் என இரண்டு வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் பிரேக் எடுத்துக் கொண்டார்.
ஆனால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில கவிதை எழுதி வெளியிட்டு வந்தார்.
Andrea Jeremiah- ஆண்ட்ரியா ஜெரேமியா(Instagram)
இந்நிலையில் ஆண்ட்ரியா திருமணமான பிரபலம் ஒருவருடன் தான் உறவில் இருந்ததாகவும், அதில் ஏற்பட்ட வலிகளின் காரணமாக சிறிது காலம் படங்களில் நடிக்காமல் விலகி இருந்தேன் என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
அந்த பிரபலம் யார் என்று பெயரை குறிப்பிடாத ஆண்ட்ரியா, அந்த நபர் தன்னை மனதளவிலும், உடலளவிலும் அதிக காயப்படுத்தினார், இதனால் நான் அதீத மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வழிகளில் இருந்து வெளியே வரவே கவிதைகள் எழுதினேன், ஆயுர்வேத சிகிச்சைகள் மேற்கொண்டேன் என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
Andrea Jeremiah- ஆண்ட்ரியா ஜெரேமியா(Instagram)