இளவரசர் ஆண்ட்ரூ அமெரிக்கச் சிறையில் அடைக்கப்படுவார்: பிரபல ஊடகவியலாளர் கணிப்பு
சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ, இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கச் சிறையிலிருப்பார் என பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஐந்து ஆண்டுகளில்...
பிரித்தானிய இளவரசரும், மன்னர் சார்லசுடைய தம்பியுமான இளவரசர் ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் சீரழித்த மோசமான பாலியல் குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்ததால் அவரது பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனும் தங்கியிருக்கும் ராயல் லாட்ஜ் என்னும் பிரம்மாண்ட மாளிகையிலிருந்து வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆண்ட்ரூவுக்கு திகிலை ஏற்படுத்தும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார் பிபிசி ஊடகவியலாளரான ஜெரமி வைன் (Jeremy Vine).

ஆம், இளவரசர் ஆண்ட்ரூ இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கச் சிறையிலிருப்பார் என்று கூறியுள்ளார் ஜெரமி.
மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் நாசமாக்கிய எப்ஸ்டீன் அமெரிக்காவில் சிறையிலடைக்கப்பட்டார். அவர் உயிரிழந்தும்விட்டார்.
குற்றச்செயல்களில் எப்ஸ்டீனுக்கு உறுதுணையாக நின்ற, இளம்பெண்களை ஏமாற்றி அழைத்துவந்த எப்ஸ்டீனின் காதலியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல்லும் (Ghislaine Maxwell அமெரிக்காவில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

அப்படியிருக்கும்போது, எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த ஆண்ட்ரூவும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்கிறார் ஜெரமி.
முன்பு ஆண்ட்ரூவுக்கு, ராஜகுடும்ப உறுப்பினர், இளவரசர் என்னும் பாதுகாப்பு இருந்தது. இப்போது அவரது பட்டங்கள் பறிக்கப்பட்டுவிட்டன.
ஆகவே, இது FBIக்கு ஒரு சமிக்ஞை. ஆக, இனி அமெரிக்க அதிகாரிகள் ஆண்ட்ரூவை விசாரணைக்கு உட்படுத்தலாம் என்கிறார் ஜெரமி.
அதுமட்டுமில்லாமல், ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாராவுக்கும் இதே நிலை ஏற்படலாம் என்று கூறி, ஆண்ட்ரூ மற்றும் சாராவுக்கு திகிலை ஏற்படுத்தியுள்ளார் ஜெரமி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |