இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டு... அரண்மனையில் இருந்து வெளியேற்றப்படும் ஆண்ட்ரூ
மன்னர் சார்லஸ் எடுத்துள்ள மிகக் கடுமையான முடிவை அடுத்து, அவரது சகோதரர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டுள்ளதுடன், அரண்மனையில் இருந்தும் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ அல்ல
பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஆண்ட்ரூ உடன் சில வாரங்கள் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், அவர் தங்கியிருந்த 31 அறைகள் கொண்ட மாளிகையில் இருந்து வெளியேற அவர் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இனி அவர் இளவரசர் ஆண்ட்ரூ அல்ல என்றும், இனி முதல் அவர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்றே அடையாளப்படுத்தப்படுவார் என்ற அதிர்ச்சி தகவலையும் மன்னர் சார்லஸ் குடும்பம் உறுதி செய்துள்ளது.
சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி, அமெரிக்காவில் சிறைச்சாலை ஒன்றில் மரணமடைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் வைத்திருந்த நட்பு தற்போது ஆண்ட்ரூவை பழி வாங்கியுள்ளது.
ஆண்ட்ரூவின் பட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே சார்லஸ் மன்னரால் பறிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இளவரசர் என்ற அந்தஸ்தையும் சார்லஸ் மன்னர் பறித்துள்ளார்.

தீவிரமாக ஆலோசித்து
2078 வரையில் அரண்மனை சார்பில் 31 அறைகள் கொண்ட மாளிகை ஒன்றில் தங்கியிருக்க ஆண்ட்ரூ ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்ததும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அரச குடும்பத்திற்கு சொந்தமான சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் ஆண்ட்ரூ இனிமேல் வசிப்பார் என்றும், அவருடன் வசித்து வந்த முன்னாள் மனைவி சாரா பெர்குசன் தற்போது தனக்கென ஒரு குடியிருப்பு தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் சார்லஸ் மன்னரும் தீவிரமாக ஆலோசித்து எடுத்துக்கொண்ட முடிவு இதுவென்றே கூறப்படுகிறது. ஆண்ட்ரூவின் இரு மகள்களும் இளவரசி பட்டத்தை தக்கவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        