முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படலாம்... வெளிவரும் புதிய பின்னணி
பிரித்தானிய அரச குடும்பத்திற்கே அவமானமாக மாறியுள்ள ஆண்ட்ரூவின் கடவுச்சிட்டு பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர் ஒருவர் அதன் பின்னணியை விளக்கியுள்ளார்.
அனுமதிக்கப்படக்கூடாது
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், அபுதாபி அரச குடும்பத்திற்கு சொந்தமான எஸ்டேட்டில் 10 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொகுசு மாளிகையில் குடியேறக்கூடும் என்றும்,

பிரித்தானியாவில் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகிச் செல்லவும் அவர் திட்டமிட்டு வருவதாக பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பான நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால், ஆண்ட்ரூ மற்றும் அவரது முன்னாள் மனைவி சாரா தொடர்பிலான ஊழலை அம்பலப்படுத்திய எழுத்தாளர் Andrew Lownie தெரிவிக்கையில், பிரித்தானிய அரச குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள முன்னாள் இளவரசர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படக்கூடாது என்றார்.
மட்டுமின்றி, ஆண்ட்ரூ நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாதபடி அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், அவர் விமான ஆபத்து என்றும் லோனி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எழுந்துள்ள கடவுச்சிட்டு விவகாரம் ஆண்ட்ரூவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் ஆண்ட்ரூ தொடர்பான பல தகவல்கள் வெளியே வரலாம் என்றும், அந்த நபருடன் ஆண்ட்ரூ தீவிரமாக செயல்பட்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றே லோனி குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் கண்டிப்பாக ஆண்ட்ரூ விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அவரது கடவுச்சீட்டை கட்டாயம் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் லோனி கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது ஆண்ட்ரூவிற்கு
மன்னர் ஜுவான் கார்லோஸைப் போல மத்திய கிழக்கு நாடுகளுக்கு தப்பிச் செல்வதன் மூலம் ஆண்ட்ரூ எந்தவொரு சட்டப்பூர்வ வழக்குகளையும் தவிர்ப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக லோனி குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகள் அவரை விசாரித்து, தண்டனைக்கு உட்படுத்த தீவிரமாக இருந்தால், அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டும் என்றார். அபுதாபியில் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு சொந்தமான, கடற்கரை வீட்டைப் பயன்படுத்த ஆண்ட்ரூவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டாம் எலிசபெத் ராணியின் மரணத்தைத் தொடர்ந்து, வளாகத்திற்குள் இருந்த இந்த மாளிகையைப்ப் புதுப்பிக்கவும் ஷேக் முகமது உத்தரவிட்டிருந்தார். 6 படுக்கை அறைகள் கொண்ட அந்த மாளிகை தற்போது ஆண்ட்ரூவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால், இனி அவர் ஐக்கிய அமீரகம் மற்றும் பிரித்தானியாவிலும் தனது நேரத்தை செலவிடுவார். மேலும், இதற்கு முன்னரும் ஆண்ட்ரூ மற்றும் அவரது இரு மகள்களும் அபுதாபியில் அந்த மாளிகையில் தங்கியுள்ளனர்.
ஷேக் முகமது மற்றும் ஆண்ட்ரூ இடையே பல ஆண்டுகால நட்புறவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |