மகள்களின் எதிர்காலத்துக்காக மன்னர் சார்லசுடன் ஆண்ட்ரூ ரகசிய ஒப்பந்தம்
மோசமான நபருடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததால் இளவரசர் பட்டம் உட்பட அனைத்து பட்டங்களையும் இழந்த ஆண்ட்ரூ, தன் பிள்ளைகளின் நலனுக்காக மன்னர் சார்லசுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சார்லசுடன் ஆண்ட்ரூ ரகசிய ஒப்பந்தம்
ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவர், அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர்.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது.
அதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசனும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது சமீபத்தில் தெரியவந்ததால் பெரும் சர்ச்சை உருவானது.

ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டு அவரும் அவரது முன்னாள் மனைவியும் தாங்கள் வாழும் வீட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள் நிலை குறித்து அச்சம் தெரிவித்திருந்தார் சாரா.
ஆனால், மன்னர் சார்லஸ் இளவரசிகளின் பட்டங்களைப் பறிப்பதில்லை என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
காரணம், இளவரசி பீட்ரைஸுக்கு ராஜகுடும்பத்துடன் நெருக்கமான Outward Bound என்னும் தொண்டு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னருடன் ஆண்ட்ரூ செய்துகொண்ட ஒரு ரகசிய ஒப்பந்தமே அவரது பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பட்டங்கள் பறிக்கப்படாமல் காப்பாற்றப்பட காரணமாக இருந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை ஊடகவியலாளரான ரிச்சர்ட் ஈடன் (Richard Eden) என்பவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, தனது பட்டங்களைத் துறப்பதுடன், ராஜகுடும்பத்தைவிட்டும் வெளியேற ஆண்ட்ரூ ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவரது பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பட்டங்கள் பறிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |