புடின் மிருகத்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்டார்: உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு
அமைதிப் பேச்சுவார்த்தையை குலைக்கும் வகையில் ரஷ்யாவின் புதிய தாக்குதல்கள் இருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையே தாக்குதல்
கீவ் மற்றும் வடகிழக்கு நகரமான கார்கிவில் குண்டுவெடிப்பு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
Oleksandr Magula/AFP
அபுதாபியில் இரண்டாவது நாள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையே இந்த தாக்குதல் நிகழ்வு நடந்துள்ளது.
உக்ரேனிய மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள், அமெரிக்காவின் சமீபத்திய மத்தியஸ்த திட்டங்கள் குறித்து பேச தயாராக இருந்தனர்.
அமைச்சர் குற்றச்சாட்டு
அப்போது ரஷ்யாவின் தாக்குதல் என்று குறிப்பிட்டு, சமாதான முயற்சிகளா? ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முத்தரப்பு சந்திப்பா? இராஜதந்திரமா? உக்ரேனியர்களுக்கு, இது ரஷ்ய பயங்கரவாதத்தின் மற்றொரு இரவு என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்தார்.
State Emergency Service of Ukraine
மேலும் அவர், "ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னேற்றுவதற்காக அபுதாபியில் பிரதிநிதிகள் கூடிக்கொண்டிருக்கும்போது, உக்ரைனுக்கு எதிராக ஒரு மிருகத்தனமான பாரிய ஏவுகணைத் தாக்குதலை உத்தரவிட்டார். அவரது ஏவுகணைகள் நமது மக்களை மட்டுமல்ல, பேச்சுவார்த்தை மேசையையும் தாக்கின" என்றார்.
Ministry of Foreign Affairs
Reuters
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |