ஆண்ட்ராய்டு Smartphone-ஐ பாதுகாப்பாக வைத்திருக்க இதை மட்டும் செய்தால் போதும்!
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது.
நமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் எளிய வழிமுறைகள் என்னென்ன?
லாக் போடவும்
பாதுகாப்பாக ஸ்மார்ட்போனை வைத்திருக்க முதலில் லாக் போட்டு வைத்திருப்பது அவசியமாகும். உதாரணமாக, உங்கள் மொபைலை நீங்கள் தொலைத்துவிட்டால் அல்லது யாராவது அதை திருடிவிட்டால், நீங்கள் லாக் போட்டிருந்தால் உங்கள் போனை திறக்க அவர்களுக்கு கணிசமான அளவு நேரம் எடுக்கும். இது உங்கள் கிரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக் கணக்கு தகவல்கள் திருடு போவதை தடுக்க உதவும், மேலும் உங்கள் சாதனத்தைக் கண்காணிக்கவும் துணை புரிகிறது.
ஆண்டி- வைரஸ்
செயலிகள் ஆண்டி- வைரஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்துவது உங்கள் ஸ்மார்ட்போனில் Android security பிரச்னைகளை கவனித்து சரி செய்ய உதவுகிறது. Avast Mobile Security & Antivirus and Norton Mobile Security போன்ற சாஃப்ட்வேர்கள் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: Google Chrome பயன்படுத்துபவரா? உங்கள் டிவைஸ் ஹேக் செய்யப்படலாம் உஷார்
அப்டேட்
நீங்கள் பயன்படுத்தும் OS-ன் சமீபத்திய அப்டேட்டிற்கு உங்கள் Android ஸ்மார்ட்போனை மேம்படுத்துவது முக்கியம். உங்கள் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் ஆப்ஸ்களின் சமீபத்திய வெர்சனை அப்டேட்டை செய்து கொள்வது வைரஸ்கள் உங்கள் ஸ்மார்போனை பாதிக்காமல் தடுப்பதற்கான சிறந்த வழியாகும்.
ஆப்ஸ் பதிவிறக்கம்
உங்களிடம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்தால் நம்பகமான தளங்களில் இருந்து மட்டுமே ஆப்ஸ் மற்றும் கேம்களை டவுன்லோடு செய்வது அவசியம். கூகுள் ப்ளே ஸ்டோர் என்பது ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கான ஆப் ஸ்டோர் ஆகும், இதிலிருந்து டவுன்லோடு செய்யலாம்.