ஆண்ட்ராய்டு Smart phone பயன்படுத்துபவரா? அதுல இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க! அப்பறம் சிக்கல் தான்
ஆண்ட்ராய்டு இயங்குதளம் உலகம் முழுவதும் பிரபலமானது. அதில் இயங்கும் சாதனங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஆகவே மோசடி பேர்வழிகள், விளம்பரதாரர்கள், ஆன்லைன் கொள்ளையர்களும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை குறி வைக்கிறார்கள்.
ஆகவே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள் எச்சரிக்கையுடன் சில விடயங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
பாஸ்வேர்டு
ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில் இப்போது கடவுச்சொல் (password) கிட்டத்தட்ட பயன்பாட்டில் இல்லை என்றே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ஃபிங்கர்பிரிண்ட் (விரல்ரேகை), ஃபேஸ் அன்லாக் (முகமறி கடவுச்சொல்) இவை பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஃபேஸ் அன்லாக், ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் வடிவம் (pattern) இவற்றை மட்டுமல்ல, நான்கு இலக்க இரகசிய குறியீடுகளை கூட ஆன்லைன் கொள்ளையர்கள் தாண்டி விடுவர். அதற்காக உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வித்தியாசமான எழுத்துகள் மற்றும் குறியீடுகளைக் கொண்ட கடினமான கடவுச்சொல்லை உருவாக்குவது பாதுகாப்பானது
ஆன்ட்டிவைரஸ் செயலி
ஸ்மார்ட்போன் இணையத்தோடு தொடர்பு கொள்கிறது; தீங்கு செய்யக்கூடிய அநேக செயலிகள், நிரல்கள் (மால்வேர்) தாக்கக்கூடும் என்பது நன்றாகவே தெரிந்தும் யாரும் ஆன்ட்டிவைரஸ் செயலியை பயன்படுத்துவதில்லை. ஸ்மார்ட்போனில் ஏற்கனவே இருக்கக்கூடிய பாதுகாப்பு, புதிய வகை வைரஸ்களை தடுப்பது கடினம். ஆகவே, கட்டணம் செலுத்தி பெறக்கூடிய ஆன்ட்டிவைரஸ் செயலியை பயன்படுத்துங்கள். அவை மால்வேர் மற்றும் ஸ்பைவேர் தாக்கும்போது உங்களை எச்சரிப்பதோடு ஸ்மார்ட்போனையும் பாதுகாக்கும்.
செயலிகளின் நிபந்தனைகள்
பல நேரங்களில் செயலிகள் கேட்கும் தேவையற்ற அனுமதிகளை நாம் தருகிறோம், இந்த தப்பை மட்டும் செய்யவே கூடாது. மீறினால் அவை தகவல்களை நம்மிடமிருந்து திருடுவதற்கு நாமே வழிவிட்டது போல ஆகிடும். ஆகவே எந்தச் செயலியையும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுவதுமாக வாசிக்காமல் தரவிறக்கம் செய்யவேண்டாம்.
திருட்டிலிருந்து பாதுகாப்பு
புதிதாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியதுமே கூகுளின் ஃபைண்ட் டிவைஸ் சேவையை செயல்படுத்துங்கள். இது உங்கள் போன் திருடப்பட்டாலும் கண்டுபிடிக்க உதவும்.
பழைய செயலிகள்
பயன்படுத்தப்படாத மற்றும் பழைய செயலிகளை ஸ்மார்ட்போனில் அப்படியே விட்டுவைக்கவேண்டாம். பயன்படுத்தவில்லையென்றால் அவற்றை அழித்துவிடவும். பழைய செயலிகள் இடத்தை அடைப்பதோடு தீமை செய்யக்கூடிய கோப்புகள் (மால்வேர்) இறங்கவும் உதவியாக அமைந்துவிடக்கூடும்.