புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி
சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுக்கும் பிரித்தானியாவின் நடவடிக்கைகள் தளராது என்கிறார் பிரதமர்.
பிரித்தானியாவின் பிரதமரான ஆன்டி பர்னாம், சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுக்க, பிரித்தானிய அரசு தளராமல் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி
சட்டவிரோத புலம்பெயர்தலைத் தடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ஆன்டி பர்னாம், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான அணுகுமுறையையே அரசு முழுமையாக மாற்றிக்கொண்டிருப்பதாகவும், ஆட்கடத்தல்காரர்களை கட்டுப்படுத்தும் அதிகாரிகளின் எண்ணிக்கை பிரான்ஸ், பிரித்தானியா என இருதரப்பிலும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்தல் பிரச்சினையை அரசு கையாள்கிறது என்பதை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்று கூறியுள்ள ஆன்டி பர்னாம், அதே நேரத்தில், பிரித்தானியாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்காக பாதுகாப்பான பாதைகளையும் உருவாக்கவேண்டும் என்றும், அப்படிச் செய்வதால், ஆட்கடத்தல் கும்பல்கள் புலம்பெயர்வோரை நம்பி பணம் பார்க்கும் வாய்ப்பை அது தட்டிப் பறித்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தான் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் விடயத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்க விரும்பவில்லை என்றும், அதை எதிர்கொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் எல்லை, கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது போல் தோன்றுகிறது என்னும் எண்ணம் பொதுமக்களுக்குப் பிடித்தது அல்ல என்று கூறியுள்ள ஆன்டி பர்னாம், நாம் எல்லையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதே நேரத்தில், உண்மையாகவே ஆதரவு தேவைப்படும் மக்களுக்கு நாம் ஆதரவும் அளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |