மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்... பிரதமர் ஆன்டி பர்னாம் பரபரப்பு தகவல்
Andy Burnham has confirmed that the UK could re-join the EU: பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையக்கூடும் என்னும் விடயத்தை உறுதி செய்துள்ளார் பிரதமர் ஆன்டி பர்னாம்.
லேபர் அரசு பிரித்தானியாவில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருகிறது.
முந்தைய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மரைப்போலவே, இப்போதைய பிரதமரான ஆன்டி பர்னாமும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டுவது மட்டுமல்ல, பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையக்கூடும் என்றும் ஆன்டி பர்னாம் கூறியுள்ளார்.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்...
பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்த பிரதமர் ஆன்டி பர்னாம், பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கு நன்மையை விட, பாதிப்புதான் அதிகம் என்று கூறியுள்ளார்.

ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை சரி செய்ய தான் முயற்சி செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி, ஒரு படி மேலேயே போய், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையக்கூடும் என்றும் கூறியுள்ளார் ஆன்டி பர்னாம்.
அதற்காக என்னென்ன செய்ய முடியும் என பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ள ஆன்டி பர்னாம், ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்காக, 2016ஆம் ஆண்டு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவுகளை புறக்கணிப்பது உள்ளிட்ட திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆன்டி பர்னாமின் பேட்டி பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.