ஆட்சிக்கு வரும் முன்பே புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துள்ள பிரதமர்

United Kingdom Migrants Andy Burnham
By Balamanuvelan Jul 14, 2026 05:40 AM GMT
Report

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதாவுக்கு, பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் ஆன்டி பர்னாம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர்

பிரித்தானிய அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

அதாவது, தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பிரித்தானியாவின் பிரதமரானார், சர் கெய்ர் ஸ்டார்மர். 

ஆட்சிக்கு வரும் முன்பே புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துள்ள பிரதமர் | Andy Burnham Backs Controversial Asylum Bill

ஆனால், அவர் புலம்பெயர்தலை போதுமான அளவுக்கு கட்டுப்படுத்தவில்லை என கருத்து உருவாகவே, அதை பயன்படுத்திக்கொண்டு அவரது பதவியை காலி செய்ய அவரது கட்சிக்குள்ளேயே சிலர் தயாரானார்கள்.

அதன்படி, அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய, அவரது இருக்கையில் அமர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளார் ஆன்டி பர்னாம் என்னும் நபர். 

எல்லைகளில் நிலவும் குழப்பம்: பிரான்சும் பிரித்தானியாவும் எடுத்துள்ள முடிவு

எல்லைகளில் நிலவும் குழப்பம்: பிரான்சும் பிரித்தானியாவும் எடுத்துள்ள முடிவு

விடயம் என்னவென்றால், அவருக்கு லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அமோக ஆதரவு உள்ளது.  

ஆட்சிக்கு வரும் முன்பே புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துள்ள பிரதமர் | Andy Burnham Backs Controversial Asylum Bill

இந்நிலையில், தன் பங்குக்கு தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, புதிய பிரதமர் பதவியேற்கும் முன்பே, அவசர அவசரமாக புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதா ஒன்றை முன்வைத்துள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்!

புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதா என அழைக்கப்பட்டாலும், அது புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்தக்கூடிய வகையிலான ஒரு மசோதா ஆகும். 

அகதி நிலை வழங்கப்படுவோருக்கான பாதுகாப்பு காலகட்டத்தைக் குறைத்தல், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அரசு வழங்கிய நிதியை திருப்பிச் செலுத்த வைத்தல், குடியமர காத்திருக்கும் காலகட்டம் நீட்டிப்பு, ஆங்கில மொழிப்புலமையின் அவசியம் என பல கடுமையான விதிகள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

ஆட்சிக்கு வரும் முன்பே...

இந்நிலையில், ஷபானா முன்வைத்த புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதாவுக்கு ஆன்டி பர்னாம் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழவையில் ஷபானா முன்வைத்த புலம்பெயர்தல் மற்றும் புகலிட மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 264 பேரும், எதிராக 90 பேரும் வாக்களிக்க, மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆக, முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே, ஆன்டி பர்னாமும், புலம்பெயர்தல் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது தெளிவாகியுள்ளது! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US