புதிய பிரதமர் பதவியேற்றதும் முதலில் வீட்டுக்கு அனுப்பப்போவது இவரைத்தான்
பிரித்தானிய அரசியலில் குழப்பமான சூழல் நிலவுவது குறித்து பலரும் அறிந்திருக்கலாம்.
பிரித்தானியாவின் பிரதமராக இருந்த கெய்ர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார்.ஆனால், அவரது இடத்தைப் பிடிப்பதற்காக கடும் முயற்சி செய்து இடைத்தேர்தலில் வெற்றியும் பெற்றுவிட்ட ஆன்டி பர்னாம் இன்னமும் பிரதமராக தயாராகவில்லையாம்!
ஆக, செப்டம்பரில் அவர் பதவியேற்கும் வரை ஸ்டார்மரே பிரதமர் பொறுப்பை கவனித்துக்கொள்ளக்கூடும் என கூறப்படுகிறது.
முதலில் வீட்டுக்கு அனுப்பப்போவது இவரைத்தான்...
இதற்கிடையில், ஆன்டி தனது அமைச்சரவையில் யார் யாரை அமைச்சர்களாக்குவார், யார் யாரையெல்லாம் வீட்டுக்கு அனுப்புவார் என்பது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில், ஆன்டி பதவியேற்றதும் முதலில் வீட்டுக்கு அனுப்பப்போவது சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸைத்தான் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ரேச்சலின் பொருளாதாரக் கொள்கைகள், வரி விதிப்புகளால் அவர் மீது பலரும் கோபத்திலிருக்கும் நிலையில், ஆன்டி ரேச்சலை சேன்ஸலர் பதவியில் நீடிக்க அனுமதிக்கமாட்டார் என கூறப்படுகிறது.
ஆனால், தனக்கு ஏதாவது பொறுப்பு வேண்டும் என ரேச்சல் கேட்டுள்ளதாகவும், ஆகவே ஆன்டி அவருக்கு ஒரு ஜூனியர் பொறுப்பு வழங்க இருப்பதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ரேச்சலுக்கு பதிலாக சேன்ஸலர் பதவிக்கு, எரிசக்திச் செயலரான எட் மிலிபேண்ட், முன்னாள் சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங், வெளியுறவுச் செயலரான Yvette Cooper மற்றும் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் என பலரது பெயர்கள் அடிபடுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |