புடின், டிரம்ப் அரசியல் விளையாட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டிய ஜேர்மனியின் முன்னாள் சேன்சலர்
சமீபத்தில் வெளியாகியுள்ள ஆங்கெலா மெர்க்கலின் நினைவுக்குறிப்பில், அவர் டிரம்ப் மற்றும் புடின் குறித்து பல அறியப்படாத தகவல்களை கூறியுள்ளார்.
ஆங்கெலா மெர்க்கல் (Angela Merkel) ஜேர்மனியின் சேன்சலராக 2005 முதல் 2021 வரை மொத்தம் 16 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துள்ளார்.
அவரது ஆட்சியில் நான்கு அமெரிக்க ஜனாதிபதிகள், நான்கு பிரெஞ்சு ஜனாதிபதிகள் மற்றும் ஐந்து பிரித்தானிய பிரதமர்களுடன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆங்கெலா மெர்க்கலின் Freedom எனும் 720 பக்க நினைவுக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெதுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்பின் (Donald Trump) ஆளுமை பாணிகள் குறித்து நேரடி கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
டிரம்ப் தொடர்பான அனுபவங்கள்
டிரம்ப் முதன்முதலில் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து போப் பிரான்சிஸிடம் ஆலோசனை கேட்டதாக மெர்க்கல் வெளிப்படுத்தியுள்ளார்.
போப் மேர்கலிடம், பணிந்து போ ஆனால் உடைந்துவிடாதே என அறிவுரை கூறியதை மேர்க்கல் நினைவுகூர்ந்தார்.
2017-ல் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது, புகைப்படத்துக்காக டிரம்ப் கைகுலுக்க மறுத்ததாகவும், அவர் டிரம்பின் காதுக்குள் நம் இப்போது கைகுலுக்கவேண்டும் என கூறியும் அவமரியாதையாக நடந்துகொண்டதாகவும் ஆங்கெலா மேர்க்கல் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் எவ்வாறு அனைத்து நாடுகளையும் பார்க்கிறார் என்பதை விவரித்துள்ளார். டிரம்பை பொறுத்தவரை அனைத்து நாடுகளும் “ஒன்றோடொன்று போட்டியிடுவதில், ஒன்றின் வெற்றி மற்றொன்றின் தோல்வியாக இருக்கும்” என நம்புகிறார். அதாவது, அமெரிக்கா வெற்றி பெற மற்ற நாடுகள் தோற்கத்தான் வேண்டும் என நினைக்கிறார்.
டிரம்பின் வாதங்களை ஒப்புக் கொள்ளாமலேயே உலகின் ஒட்டுமொத்த நன்மைக்காக சமரசம் செய்ய முற்பட்டதாக மெர்க்கல் கூறியுள்ளார்.
புடின் மீது ஈர்ப்பு கொண்ட டிரம்ப்
டிரம்ப் மற்ற உலகத் தலைவர்கள் காட்டிய "சர்வாதிகார குணங்களில்" ஆர்வமாக இருந்தார் என்ற எண்ணத்தைப் பெற்றதாக மெர்க்கல் நினைவு கூர்ந்தார்.
டிரம்ப் வெளிப்படையாக ரஷ்ய ஜனாதிபதி புடினால் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்று மெர்க்கல் கூறியுள்ளார்.
புடினின் அதிகார விளையாட்டுகள்
மெர்க்கல், புடின் தனது ஆளுமையை மேம்படுத்த பல வகையான பாய்ச்சல்களை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
2007ல் நடைபெற்ற G8 உச்சி மாநாட்டின் போது, புடின் அவரை குறுக்கி காத்திருக்க வைத்தது அல்லது அவரை நாய்களால் பயமுறுத்திய நிகழ்வுகளை தனது நினைவுக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
புடின் எப்போதும் தான் அவமதிக்கப்படுவதை விரும்பாதவராகவும், தான் அவமதிக்கப்படுவோமெனில் உடனடியாக பதிலடி கொடுக்கவும் தாக்கவும் தயாராக இருந்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.
உக்ரைன் நாட்டு பாதுகாப்பு பற்றி புடின் கூறியதையும், 2022-ல் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை தனது பதவிவிலகலுக்குப் பின்னர் புடின் திட்டமிட்டதாகவும் அவர் விவரித்துள்ளார்.
ஒபாமா மற்றும் டிரம்ப் இடையே மாறுபாடுகள்
மெர்க்கல், ஒபாமாவை ஒரு தரமான ஆலோசகர் என்றும், தனது நடவடிக்கைகளில் உணர்ச்சிகளை பின்பற்ற ஊக்குவித்தவர் என்றும் குறிப்பிடுகிறார்.
அதே சமயத்தில், டிரம்ப் அரசியலை சர்வதேச போட்டியாக மட்டும் கண்டார் என விமர்சிக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Angela Merkel's Freedom, Angela Merkel new memoir, Vladimir Putin power games, Donald Trump