காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்! அந்த உலகத்தலைவர்களும் இதற்கு உடந்தை - கொந்தளித்த பிரபல நடிகை
போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி, பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காசா மீது குண்டுவீச்சு
தாக்குதல் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 9,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், ஹாலிவுட்டின் பிரபல நடிகை மற்றும் UNHCRயின் சிறப்பு தூதராக பணியாற்றிய ஏஞ்சலினா ஜோலியும், இஸ்ரேல் காஸா மீது குண்டுவீசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
MAHMUD HAMS / AFP
அவர் வெளியிட்டுள்ள பதிவில் மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து ஒரு அறிக்கையை பகிர்ந்தார். அத்துடன் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பாலஸ்தீனிய பகுதி ஒரு வெகுஜன புதைகுழியாக மாறுகிறது என குறிப்பிட்டார்.
மேலும் அவர், எங்கும் தப்பி ஓட முடியாத வகையில் சிக்கிக்கொண்ட மக்கள் மீது திட்டமிட்ட குண்டுவீச்சு என இஸ்ரேலின் நடவடிக்கையை விவரித்தார்.
Agencies
ஏஞ்சலினா கடும் கண்டனம்
அத்துடன், 'காசா கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக உள்ளது. மில்லியன் கணக்கான பாலஸ்தீனிய குடிமக்கள் - குழந்தைகள், பெண்கள், குடும்பங்கள் - கூட்டாக தண்டிக்கப்படுகின்றனர். போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க மறுப்பதன் மூலம் உலகத்தலைவர்கள் இந்த குற்றங்களுக்கு உடந்தையாக உள்ளனர்' என ஏஞ்சலினா ஜோலி குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில் பாலஸ்தீன சுகாதார அமைச்சத்தின் தகவலின்படி தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,000ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Getty Images / Guillermo Legaria
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |