உக்ரைனில் நடிகை ஏஞ்சலினா ஜோலி! ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலால் பரபரப்பு
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைனுக்கு சென்றிருந்த நிலையில், ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை ஏஞ்சலினா ஜோலி (46) ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர் மக்கள் பிரிவின் சிறப்பு தூதராக உள்ளார். அவர் நேற்று போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட லிவிவ் நகருக்கு சென்ற ஏஞ்சலினா ஜோலி, அங்குள்ள பேக்கரிகளுக்கு எதிர்பாராத விதமாக சென்று அங்குள்ள மக்கள், குழந்தைகளிடம் பேசி உற்சாகப்படுத்தினார். மேலும், ஏஞ்சலினா ஒரு தங்குமிடத்தில் சமையல்காரர்களைப் பார்வையிட்டார்.
⚡️ Actress and filmmaker Angelina Jolie was spotted at a cafe in western Ukrainian city of Lviv on April 30.
— The Kyiv Independent (@KyivIndependent) April 30, 2022
Jolie is a special envoy for the United Nations High Commissioner for Refugees.
Video: Maya Pidhoretska via Facebook. pic.twitter.com/CBtR4HBMNR
ஏப்ரல் 30 அன்று டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள போக்ரோவ்ஸ்க் என்ற நகரத்திலிருந்து வெளியேற்றும் ரயிலில் வரும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த உக்ரேனியர்களை வரவேற்க லிவிவில் உள்ள மத்திய ரயில் நிலையத்தையும் அவர் பார்வையிட்டார்.
மேலும், அங்குள்ள ரயில் நிலையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் பேசிய ஏஞ்சலினா, அவர்களிடம் போர் பாதித்த மக்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் பேசி புகைப்படம் எடுத்து அவற்றை ஏஞ்சலினா மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
Angelina Jolie at the Lviv railway station. pic.twitter.com/8L1NqtoS7a
— ТРУХА⚡️English (@TpyxaNews) April 30, 2022
இது குறித்து பேசிய ஏஞ்சலினா, பாதிக்கப்பட்ட மக்களின் அதிர்ச்சியை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகள் சந்திக்கும் வலியை தான் உணர்வதாகவும், யாராவது அவர்களை தேற்றினால் அது அவர்களுக்கு மேம்பட்ட உணர்வை தரும் என்று கூறினார்.
மேலும், இந்த சந்திப்பின் போது ஒரு சிறுமி தனக்கு வந்த கனவை ஏஞ்சலினா ஜோலியிடம் கூறி பகிர்ந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், அவர் இருக்கும் லிவிவ் நகரத்திற்கு ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் எழுந்துள்ளதால் அவர் அங்கிருந்து பாதுகாப்பான் இடத்துக்கு கொண்டு செல்லபட்டுள்ளார். தாக்குதல் குறித்தல் தகவல் வெளியானதும், அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து அவசர அவசரமாக காட்சிகளும்சக அவளைதளங்களில் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் போர் பாதிப்புக்குள்ளான மற்றொரு நாடான ஏமனுக்கு ஐநா சிறப்பு தூதராக ஏஞ்சலினா பயணம் செய்து அம்மக்களை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
Angelina Jolie had to run for cover in Lviv today due to a missile strike threat pic.twitter.com/5Si6ouOOUG
— Ragıp Soylu (@ragipsoylu) April 30, 2022
முன்னதாக கடந்த வியாழனன்று ஐநா பொதுச் செயலாளர் உக்ரைனுக்கு வந்திருந்த போதே ரஷ்யா தலைநகர் கீவை சுற்றி வான்வழி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.