சிறப்பான தொடக்கம், Goodluck இலங்கை! ஆசியக்கோப்பையில் முதல் வெற்றிக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் வாழ்த்து
வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இலங்கை அணி முதல் வெற்றி
ஆசியக்கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின.
முதலில் ஆடிய வங்கதேச அணி 164 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஷாண்டோ 89 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கையின் பத்திரனா 4 விக்கெட்டுகளும், தீக்ஷணா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
@BCBtigers
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் திமுத் (1), நிசங்கா (14), குசால் மெண்டிஸ் (5) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும் சதீரா சமரவிக்ரமா (54), சரித் அசலங்கா (62) அரைசதம் விளாசி 39 ஓவர்களிலேயே அணியை வெற்றி பெற வைத்தனர்.
AP/PTI
ஏஞ்சலோ மேத்யூஸ் வாழ்த்து
இலங்கை அணிக்கு வெற்றிக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில்,
'இன்று (நேற்று) தொடக்கத்திற்கு இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்! ஆசியக்கோப்பையில் சிறந்த துவக்கத்தைப் பெற்று, அதை முன்னெடுத்து செல்வோம்' என தெரிவித்துள்ளார்.
AP Photo/Eranga Jayawardena
Good luck @OfficialSLC starting today ! Let’s have a great start and carry it forward ! #AsiaCup
— Angelo Mathews (@Angelo69Mathews) August 31, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |