சொகுசு காரை ஹொட்டலுக்குள் வேண்டுமென்றே செலுத்திய நபர்! சொன்ன அதிர்ச்சி காரணம்
சீனாவில் தனது லேப்டாப்பை காணவில்லை என்பதால் நபர் ஒருவர் சொகுசு காரை ஹொட்டலுக்குள் செலுத்தி சேதத்தை ஏற்படுத்தினார்.
காணாமல் போன லேப்டாப்
ஷாங்காய் நகரில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் சென் தங்கியுள்ளார். தன்னுடைய லேப்டாப் காணாமல் போனதாக ஹொட்டல் ஊழியர்களிடம் அவர் புகார் கூறியுள்ளார்.
ஆனால், ஊழியர்கள் அவருக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சென்னுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற சென், தனது விலையுயர்ந்த சொகுசு காரை ஹொட்டலின் வரவேற்பு பகுதிக்குள் வேகமாக மோதியுள்ளார். அத்துடன் இல்லாமல் அங்கிருந்த அலங்கார பொருட்கள், மேசைகள், கண்ணாடிகள் உள்ளிட்டவற்றின் மீதும் மோதி சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்.
On Jan 10 a car crashed into the lobby of Jinling Purple Mountain Hotel Shanghai (上海金陵紫金山大酒店) in Lujiazui, Pudong after the driver, a guest at the hotel, had a spat with hotel staff over his notebook computer which purportedly went missing in his room. pic.twitter.com/ExOaAPTtJK
— Byron Wan (@Byron_Wan) January 11, 2023
கைது செய்த பொலிஸார்
இறுதியாக கார் ஒரு தூணில் மோதி நின்றுள்ளது. அப்போது ஹொட்டல் ஊழியர்கள் காரின் கண்ணாடியை உடைத்து சென்-ஐ வெளியேற்றியுள்ளனர்.
அதன் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.