கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்... முக்கிய நாளில் கண்ணீர் விட்டு கதறிய சார்லஸ்- கமிலா தம்பதி
இதுபோன்ற நெருக்கடியான சூழலை இதுவரை எந்தப் பெண்மணியும் கடந்து சென்றிருக்க வாய்ப்பில்லை
கமிலா மீது பொருட்களை தூக்கி வீசும் நிலை, அந்த தருணங்களை புன்னகையுடன் எதிர்கொண்டார்
பிரித்தானிய பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் என எண்ணி மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி தங்கள் திருமணத்தன்று கதறி அழுததாக தகவல் கசிந்துள்ளது.
புத்தக ஆசிரியரான Angela Levin என்ற பெண்மணி இந்த விவகாரம் தொடர்பில் ,மிக விரிவான தகவலை வெளியிட்டுள்ளார். அதில், கமிலாவை மிக சாதாரணமாக அருவருப்பான பெண் என்றே பல ராஜகுடும்பத்து ஆதரவான பிரித்தானியர்கள் கூறி வந்ததாகவும்,
@getty
இளவரசி டயானாவுடனான குழப்பம் மிகுந்த விவாகரத்து நிகழ்வுகள் அனைத்திற்கும் கமிலாவே காரணம் எனவும் வெளிப்படையாக பேசியதாகவும் ஏஞ்சலா லெவின் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சூழலை இதுவரை எந்த பெண்மணியும் கடந்து சென்றிருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வீடு, நண்பர்கள் வட்டம், தேவைக்கு அதிகமான பணம் என வாழ்ந்தவர் இறுதியில் அருவருப்பான பெண் என்ற பட்டத்தை சுமப்பது எத்தனை கொடுமை என ஏஞ்சலா லெவின் தமது புத்தகத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
@getty
மன்னர் சார்லஸுடன் கமிலா வாழ்ந்து வந்தாலும், அப்போது அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை, ஏன் நிச்சயதார்த்தம் கூட முடிந்திருக்கவில்லை, இதனாலையே கமிலா மீதான பழிச்சொற்களை எதிர்கொள்ள முடியாமல் போனது என்கிறார் ஏஞ்சலா லெவின்.
பல்பொருள் அங்காடிக்க்கு சென்றால், கூட்டம் கூடிவிடும், கமிலா மீது பொருட்களை தூக்கி வீசும் நிலையும் இருந்தது. ஆனால் அந்த தருணங்களை அவர் புன்னகையுடன் எதிர்கொண்டார்.
@getty
அதற்கான பலன் அவருக்கு 2005ல் கிடைத்தது. சார்லஸ்- கமிலா திருமணம் 2005ல் முன்னெடுக்கப்பட்டது. திருமணம் முடித்து இருவரும் விண்ட்சர் மாளிகையின் படிக்கட்டில் ஏறும் போது, இருவருமே கண்ணீர் விட்டு கதறியுள்ளனர்.
மக்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்றே இருவரும் கவலை கொண்டுள்ளனர். திருமணத்திற்கு அடுத்த நாள், படுக்கையறையில் இருந்து கமிலா வெளியே வரவே அஞ்சியுள்ளார். ஆனால் அதன்பின்னர் கமிலா பொதுமக்களுக்கு மட்டுமல்ல ராணியாருக்கும் மிகவும் பிடித்தமான நபர்களில் ஒருவரானார்.