அனில் அம்பானியின் ரூ 3,69,000 கோடி நிறுவனத்தை வெறும் ரூ38000 கோடிக்கு வாங்கிய நிறுவனம்!
அனில் அம்பானியின் திவாலான நிறுவனமான ரிலையன்ஸ் கேபிட்டலை ஹிந்துஜா குழுமம் ரூ.9,650 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப் பாரிய பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி, தனது நிறுவனமான Reliance Capital-ஐ விற்க உள்ளார்.
கடனில் சிக்கியுள்ள அனில் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் கேபிட்டலுக்கான தீர்வுத் திட்டத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, இந்துஜா குழும நிறுவனமான IndusInd International Holdings Limited (IIHL) ரிலையன்ஸ் கேபிட்டலைப் பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது.
ரிலையன்ஸ் கேபிட்டலை IIHL ரூ.9,650 கோடிக்கு (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ 38000 கோடி) ஏலம் எடுத்தது. ஏப்ரல் 1, 2023 அன்று நடந்த ஏலத்தில் இந்த ஏலமானது அதிகபட்சமாக இருந்தது.
ஒருகாலத்தில் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம் ரூ. 93,851 கோடியாக (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 3,69,000 கோடி ) இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் கேபிடல் ஒரு நிதிச் சேவை நிறுவனம். இது தனிநபர் மற்றும் வணிகக் கடன்கள், காப்பீடு, முதலீடுகள் மற்றும் பிற நிதிச் சேவைகளை வழங்குகிறது. நிறுவனம் 2021-ல் திவாலானது.
கையகப்படுத்தப்பட்ட பிறகு, IIHL ரிலையன்ஸ் கேபிட்டலின் பெயரை இந்துஜா கேபிடல் என்று மாற்றும். ஹிந்துஜா குழுமத்தின் தலைமையில் இந்த நிறுவனம் செயல்படும்.
இந்த கையகப்படுத்தல், ஹிந்துஜா குழுமம் இந்தியாவில் நிதிச் சேவைத் துறையில் தனது இருப்பை வலுப்படுத்த உதவும். Hinduja Bank, Hinduja AMC மற்றும் Hinduja Life உள்ளிட்ட பல நிதிச் சேவை நிறுவனங்களைக் குழுமம் ஏற்கனவே இந்தியாவில் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் கேபிட்டலின் வாடிக்கையாளர்களும் இந்த கையகப்படுத்துதலால் பயனடைவார்கள். அவர்கள் சிறந்த சேவைகளையும் பொருட்களையும் பெறுவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Reliance Capital sold to Hinduja Group, Hinduja Capital, Anil Ambani younger brother of Mukesh Ambani, once richest man sell his company, IndusInd International Holdings Limited