முதல் வேலையில் ரூ.6,000 சம்பளம்., அன்று கூலியின் மகன், இன்று ரூ.55,000 கோடி நிறுவனத்திற்கு அதிபதி!
உலகில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. கடின உழைப்பை முழு நேர்மையுடன் செய்தால், பாரிய வெற்றியை அடையலாம். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் ஜெயந்தி கனனியும் (Jaynti Kanani) இதையே செய்துள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கனனியின் பொருளாதார நிலை சரியில்லை. பாடசாலை கட்டணம் செலுத்தக் கூட பணம் இல்லாத காலம் ஒன்று இருந்தது.
அவரது குடும்பம் அகமதாபாத்தின் புறநகரில் உள்ள ஒரு சிறிய குடியிருப்பில் வசித்து வந்தது. ஜெயந்தியின் அப்பா வைர தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். ஜெயந்தி கனனி எப்படியோ கணினி அறிவியலில் பி.டெக் படிப்பை முடித்தார். அவர் மேற்கொண்டு படிக்கும் அளவுக்கு வீட்டு சூழ்நிலை இல்லை. அதனால், படித்து முடித்தவுடனேயே வேலை செய்யத் தொடங்கினார்.
ரூ. 6,000 சம்பளத்திற்கு வேலை
ஜெயந்தி கனனிக்கு முதல் வேலையில் 6,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைத்தது. அந்த நேரத்தில் அப்பாவின் கண்பார்வை மிகவும் பலவீனமாகிவிட்டது. கனனி தனது தந்தையை வேலையை விட்டுவிடும்படி கேட்டார். தந்தை வேலை செய்யாததால், அனைத்து பொறுப்புகளும் கனானியின் மீது விழுந்தது.
வேலையை மாற்றிவிட்டு வேறு இடத்தில் வேலை செய்ய ஆரம்பித்தார். மேலும், கூடுதல் வருமானத்திற்காக, வேலை முடிந்த பிறகும் வீட்டில் சில திட்டங்களில் வேலை செய்து வந்தார். இதனால் குடும்பம் நன்றாக வாழ ஆரம்பித்தது. ஆனால், கனானியர் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.
திருமணத்திற்காக வாங்கிய கடன்
ஜெயந்திக்கு அதிக சம்பளம் கிடைக்கும் வேலையைத் தேட வேண்டியிருந்தது. ஒரு ஸ்டார்ட்அப்பில் சேர்ந்தார். அவர் பல பகுதி நேர திட்டங்களைச் செய்தார். திருமணத்திற்காகக் கூட கடன் வாங்கியிருந்தார். கடன் சுமையுடன் இருந்த ஜெயந்திக்கு பில்லியன் டொலர் நிறுவனத்தைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை.
ஜெயந்தி கனனி ஒரு நிறுவனத்தில் தரவு ஆய்வாளராகப் பணிபுரிந்தபோது, சந்தீப் நெயில்வால் மற்றும் அனுராக் அர்ஜுனை சந்தித்தார். மூவரும் பணம் சம்பாதிக்க ஏதாவது பாரிய காரியத்தைச் செய்ய விரும்பினர்.
இப்படித்தான் அதிர்ஷ்டம் மாறியது
2017-ல், ஜெயந்தி கனனி நெயில்வால் மற்றும் மூன்றாவது இணை நிறுவனர் அனுராக் அர்ஜுனுடன் இணைந்து பாலிகான் (Polygon) என்ற நிறுவனத்தை நிறுவினார். அவரது நான்காவது இணை நிறுவனர், செர்பிய தொழில்நுட்ப வல்லுநர் மிஹாலியோ பிஜெலிக், பின்னர் குழுவில் சேர்ந்தார்.
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான முதலீட்டாளரும் ஷார்க் டேங்க் நீதிபதியுமான மார்க் கியூபனிடமிருந்து முதலீட்டைப் பெற்றபோது நிறுவனம் வெளிச்சத்திற்கு வந்தது.
ரூ.55,000 கோடி நிறுவனத்திற்கு அதிபதி
2022- ஆம் ஆண்டில், பாலிகான் 450 மில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ.1,46,89 கோடி) நிதியை SoftBank, Tiger Global, Sequoia Capital India போன்ற முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டியது. இன்று இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.55,000 கோடி (இலங்கை பணமதிப்பில் ரூ. 2,15,548 கோடி).
பாலிகான் இயங்குதளத்தின் உதவியுடன், Ethereum அளவிடுதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை எளிதாக செய்ய முடியும். பயனர்கள் அதன் உதவியுடன் ஆப்களையும் உருவாக்கலாம். கேமிங் பிளேயர்கள், NFT-க்கள் மற்றும் decentralized finance ஆகியவற்றில் பாலிகோனின் பிளாக்செயினின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Jaynti Kanani, Jaynti Kanani Net Worth, Jaynti Kanani Age, Jaynti Kanani education, Jaynti Kanani Polygon, polygon crypto