திவாலான அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனம்., சென்னை, பூனே சொத்துக்களை விற்க அனுமதி
சென்னை மற்றும் பூனேவில் உள்ள சொத்துக்களை விற்று கடனை அடைக்க அனில் அம்பானிக்கு தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
மும்பையின் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) அனில் அம்பானியின் திவாலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு அதன் ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்று அதன் கடன்களை செலுத்த அனுமதித்துள்ளது.
இதன்படி, சென்னையில் உள்ள Haddow அலுவலகம், சென்னை அம்பத்தூரில் 3.44 ஏக்கர் நிலம், புனேவில் 871.1 சதுர மீட்டர் நிலம், புவனேஷ்வரில் உள்ள அலுவலகம், நிலம் உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய Campion Properties மற்றும் Reliance Realtyயில் பங்கு முதலீடு ஆகியவற்றை விற்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதித்தது.
கடனை அடைக்க வழி தேடும் அனில் அம்பானிக்கும், Reliance Communications (RCom) நிறுவனத்துக்கும் இந்த தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தற்காலிக நிவாரணமாக இருக்கும்.
இந்த தகவலை அனில் அம்பானியின் நிறுவனம் பங்குச்சந்தையில் தெரிவித்ததால், தற்போது RCom நிறுவனத்தின் பங்குகளின் வர்த்தகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடனில் விழுந்த அனில் அம்பானி
பல ஆண்டுகளுக்கு முன்பு, அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்தது. இருப்பினும், நிறுவனம் பின்னர் கடுமையான கடனில் விழுந்தது.
அனில் அம்பானியின் மூத்த சகோதரரும் இந்தியாவின் மிகப் பாரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டெலிகாம் நிறுவனமான Jio-வின் வருகையுடன் RCom-ன் சரிவு முழுமையடைந்தது. ஜியோவின் Free Internet மற்றும் அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகள் இந்திய தொலைத்தொடர்பு துறையை உலுக்கியது.
பங்குகளின் வீழ்ச்சி
2008-ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஒரு பங்கின் விலை 793 ரூபாயாக இருந்தது. பின்னர், நிறுவனம் திவாலானதால், பங்கின் விலையும் சரிந்தது. 2019ல், ஒரு பங்கின் விலை வெறும் 65 பைசாவாக சரிந்தது. இப்போது பங்கின் விலை ரூ.2.49 ஆகும்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.23,300 கோடி. அதேசமயம், மொத்த கடன் ரூ.64,958 கோடி. குழுமத்தில் உள்ள மற்றொரு நிறுவனமான Reliance Power பங்குகள் 0.38 சதவீதம் உயர்ந்து ரூ.23.95க்கு வர்த்தகம் ஆனது.
அனில் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு
அனில் அம்பானி சில ஆண்டுகளுக்கு முன்பு திவாலானதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதாவது, மொத்த சொத்துக்கள் வெறும் பூஜ்யம்தான். 2008-ல் இந்தியாவின் ஆறாவது பணக்காரராக இருந்த அனில் அம்பானியின் சொத்து மதிப்பு மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் (4,200 கோடி டொலர்) இருந்தது.
நிறுவனம் திவாலானாலும், அனில் அம்பானி மும்பையில் ஆடம்பரமான வீட்டில் வசித்து வருகிறார். அவர் தற்போது தனி நபராக ரூ.14,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பதாக Forbes தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Chennai Haddow Office RCom, Reliance Communications, Anil Ambani, Reliance Communications real estate assets sale, Anil Ambani Chennai Ambattur office, Anil Ambani net worth