விராட் கோலிக்காக வைர பேட்டை வடிவமைத்த தொழிலதிபர்., யார் அவர்?
விராட் கோலிக்கு பரிசாக வழங்க உருவாக்கப்பட்ட வைர பேட்டை தயாரித்த இந்திய தொழிலதிபரைப் பற்றிய தெரிந்துகொள்வோம்.
இந்திய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் வீரராக 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், துடுப்பாட்ட வீரர் Virat Kohli-க்கு, குஜராத்தைச் சேர்ந்த முன்னணி வைர நிபுணர் மற்றும் தொழிலதிபர் உத்பால் மிஸ்திரி (Utpal Mistry) தயாரித்த 1.04 காரட் வைர மட்டை சிறப்புப் பரிசாக வழங்கப்பட்டது.
சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கு மிகவும் பிடித்த பிடித்த கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு பரிசாக வழங்குவதற்காக இந்த பிரத்யேக வைர மட்டையை ஆர்டர் செய்தார்.
இது ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரம் அல்ல, இயற்கையாக உருவாகி பூமிக்கு அடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட உண்மையான வைரம் ஆகும். இந்த மட்டையின் விலை ரூ.10 லட்சத்திற்கும் அதிகம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னணி வைர தொழில்நுட்ப நிபுணரான உத்பால் மிஸ்திரி, மட்டையை ஆர்டர் செய்த சூரத் தொழிலதிபர், கோலிக்கு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைர மட்டை வேண்டாம், ஆனால் இயற்கையான வைரங்கள் கொண்ட மட்டையே வேண்டாம் என்று தெளிவான அறிவுறுத்தல் வழங்கியதாகக் கூறினார். விராட் கோலி இந்த சிறப்பு வைர மட்டையைப் பெற்றாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
யார் இந்த Utpal Mistry?
Utpal Mistry ஒரு தொழிலதிபர் ஆவார், அவர் இந்தியாவின் வைர தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமான நிபுணர்களில் ஒருவர். Lexus Softmac Companyயின் இயக்குநராக உள்ளார். அவரது சகோதரர்கள் Janak Mistry மற்றும் Kamal Mistry ஆகியோர் நிறுவனத்தின் CEO மற்றும் COO ஆவர்.
22 வயதில் வைரத் தொழிலில் சேர்ந்த உத்பால், 1995-ஆம் ஆண்டு கரடுமுரடான வைரங்களுக்கு திட்டமிடப்பட்ட வடிவத்தை வழங்கும் Mexi Cut எனும் இயந்திரத்தை வடிவமைத்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டார்.
SVNIT கல்லூரியில் (Sardar Vallabhbhai National Institute of Technology) பொறியாளர் மற்றும் தங்கப் பதக்கம் வென்றவர். IIM Ahmedabad-ல் MDP பட்டமும், SVNITயில் MTech பட்டமும் பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Virat Kohli Diamond Bat, Utpal Mistry, Janak Mistry, Kamal Mistry, Virat Kohli, Diamond businessman Utpal Mistry