UAE லொட்டரியில் 100 மில்லியன் திர்ஹாம் வென்ற இந்தியர் - ஒரு வருடம் கழித்து அவரது நிலை
Anilkumar Bolla’s Life After Dh100m UAE Lottery Win: UAE லொட்டரியில் 100 மில்லியன் திர்ஹாம் வென்ற இந்தியர், ஒரு வருத்தத்திற்கு பிறகு அவரது இன்றைய நிலை என்ன என்பதை பார்க்கலாம்.
100 மில்லியன் திர்ஹாம் வென்ற இந்தியர்
அபுதாபியில் வசிக்கும் இந்தியர் அனில் குமார் போலா, கடந்த ஆண்டு UAE லொட்டரியில் Dh100 மில்லியன் (சுமார் ரூ.250 கோடி) வென்று வரலாற்றை படைத்தார். ஒரு வருடம் கழித்து, அவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை பகிர்ந்துள்ளார்.

அனில் குமார், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். 2025 அக்டோபர் 18 அன்று நடந்த “Lucky Day Draw” லொட்டரியில் 7 எண்களை சரியாக பொருத்தி, நாட்டின் மிகப்பெரிய பரிசை வென்றார்.
அவர் கூறியதாவது: “எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு பணம் அல்ல, என் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு தான்” என்று கூறினார்.
வெற்றிக்குப் பிறகு, அவர் தனது தாய்க்கு தங்க நகைகள் பரிசளித்தார், தந்தைக்கு இயற்கை விவசாயம் செய்ய நிலம் வாங்கித் தந்தார். UAE மற்றும் இந்தியாவில் சொத்துகள் வாங்கி, எதிர்கால வியாபாரத் திட்டங்களை ஆராய ஆரம்பித்துள்ளார்.
அனில் குமார், “என் மகிழ்ச்சி எப்போதும் என் குடும்பத்துடன் இணைந்ததே. அவர்களுக்காக எதையும் செய்வதே எனக்கு உண்மையான சந்தோஷம்” என்று தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் அவர் குடும்பத்துடன் பயணம் செய்து, புதிய அனுபவங்களை பெற்றார். மக்கள் அவரை “மில்லியனர்ஸ் கிளப்” உறுப்பினராக அடையாளம் காண ஆரம்பித்துள்ளனர்.
அவர், “பணத்தை ஒழுங்காகவும் எளிமையாகவும் செலவிடுங்கள்” என்ற அறிவுரையை மற்ற வெற்றியாளர்களுக்கு கூறுகிறார். இந்த வெற்றி, அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது என்று அவர் சுருக்கமாக விவரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |