அமெரிக்கா செல்லாமல் மாடுகள் விற்பனை செய்து ரூ.500 கோடி வருமானம்.., சாதிக்கும் IIT பெண்கள்
ஐ.ஐ.டி. முன்னாள் மாணவிகள் இரண்டு பேர் தொடங்கிய அனிமல் செயலி மூலம் 3 ஆண்டுகளில் ரூ.2,500 கோடிக்கு 5 லட்சம் மாடுகள் விற்பனையாகியுள்ளன.
யார் இவர்கள்
இந்திய தலைநகர் டெல்லி ஐ.ஐ.டியில் படித்த இரண்டு மாணவிகள் ஒன்லைன் மூலம் மாடுகள் விற்பனை செய்து வெற்றிகரமான தொழிலை உருவாக்கியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி. இவர்கள் இருவரும் டெல்லி ஐஐடியில் படிக்கும் போது ஒரே அறையில் தங்கி படித்துள்ளனர். பின்னர், இருவரும் வேலைக்கு சென்ற போது ஒன்லைனில் மாடுகளை விற்பனை செய்யலாம் என்ற யோசனை வந்துள்ளது.
அதற்காக, மாடுகள் வளர்க்கும் விவசாயிகளிடம் பேசியுள்ளனர். பின்பு, 2019 -ம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு மாடுகள் விற்பனை செய்யும் தொழிலை செய்தனர்.
அனிமல் செயலி
பின்னர், இருவரும் பெங்களூரு வந்து ஒன்லைனில் மாடுகள் விற்பனை செய்யும் அனிமல் செயலியை தொடங்கினர். இந்த செயலியில் நீதுவின் நண்பர் 24 மணிநேரத்தில் 3 மாடுகளை விற்பனை செய்தார். மேலும், நீதுவின் தந்தைக்கே இந்த செயலி உதவியது. அவரிடம் இருந்த எருமைமாடை இந்த செயலி மூலம் விற்பனை செய்தார்.
இதனைத்தொடர்ந்து, நீது மற்றும் கீர்த்தி ஆகிய இருவரும் நண்பர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் முதலீடு பெற்றனர். மேலும், இவர்களின் மீது நம்பிக்கை வைத்து மும்பை மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் ரூ.44 கோடி முதலீடு செய்தன. அதனைத்தொடர்ந்து, ரூ.102 கோடி முதலீடுகள் வந்து சேர்ந்தன.
அதன்படி, அனிமல் செயலி தொடங்கிய 3 ஆண்டுகளில் ரூ.2,500 கோடிக்கு 5 லட்சம் மாடுகள் விற்பனை செய்யப்பட்டன. இதுவரை ரூ.500 கோடி வரை லாபம் பெற்றுள்ளனர்.
இது குறித்து, கீர்த்தி கூறுகையில், "நான் என் தந்தையிடம் வேலையை விட்டுவிட்டேன் என சொன்னவுடன் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும், அவர்கள் நான் அமெரிக்கா செல்வேன் என நினைத்தார்கள். ஆனால், நான் மாடு விற்பனை செய்ய போகிறேன்" எனக் கூறினேன்.
மேலும், நீது கூறுகையில், "அனிமல் ஆப் மூலம் பால் பண்ணை நடத்தும் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் இலக்கு" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |