ரஷ்யாவின் சட்டவிரோத தாக்குதல்... உக்ரைனுக்கு கனடாவின் உதவி! தமிழ் வம்சாவளி பெண் அனிதா ஆனந்த் கர்ஜிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத தாக்குதலுக்கு கனேடிய பாதுகாப்பு அமைச்சரான தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பில் உக்ரைனுக்கு உதவுவது குறித்து உக்ரேனிய துணை வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ செனிக்கை அனிதா சந்தித்து பேசியுள்ளார்.
சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் அனிதா வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத தாக்குதலானது நம் அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச விதிகளின் மீதான தாக்குதலாகும்.
Russia’s illegal attack on Ukraine is also an attack on the international rules that protect all of us. This war has impacts around the world, including in the Indo-Pacific. I spoke with Ukraine’s Deputy Foreign Minister, @senikd, about Canada’s continued aid for Ukraine. ???? pic.twitter.com/t29x4gkIGV
— Anita Anand (@AnitaAnandMP) June 11, 2022
இந்தப் போர் இந்தோ-பசிபிக் உட்பட உலகம் முழுவதும் தாக்கங்களைக் கொண்டுள்ளது.
உக்ரைனுக்கான கனடாவின் தொடர்ச்சியான உதவிகள் தொடர்பாக உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சருடன் பேசினேன் என தெரிவித்துள்ளார்.