பிரித்தானியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை: 28 வயது இளைஞர் கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆன் விட்கோம்ப் கொலை வழக்கில் 28 வயது நபர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ஆன் விட்கோம்ப்
டெவோனில் உள்ள ஹேடரில் வசித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரீஃபார்ம் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஆன் விட்கோம்ப்(Ann Widdecombe) கடந்த ஜூலை 9ம் திகதி அவரது வீட்டில் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.
ஜூலை 8ம் திகதி மதியம் 12.30 மணியளவில் அவர் தாக்கப்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் முதலில் நியூட்டன் அபோட்டைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணைக்கு பிறகு அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஜோசுவா கெர்ரி என்பவர் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில் ஆன் விட்கோம்ப் கொலை வழக்கில் ரோதர்ஹேமைச் சேர்ந்த 28 வயது ஜோசுவா கெர்ரி மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜோசுவா கெர்ரி செவ்வாய்க்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று இந்த வழக்கை விசாரித்த கிரவுன் பிராசிகியூசன் சர்வீஸ் அறிவித்துள்ளது.
மேலும் இந்த குற்ற சம்பவத்தில் வேறு ஏதேனும் அரசியல் பின்னணியோ, பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |