காமராஜர் இறந்தபோது அதிகமாக அழுதவர் அறிஞர் அண்ணா.., சீமான் சொல்வது உண்மையா?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி சீமான் நேரில் சந்தித்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சீமான் பேசியது
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சீமான், அவரது சகோதரர் மு.க முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.
ஒரு இழப்பு என்பது பெருந்துயரம். கொள்கை முரண் என்பது வேறு, பாசம் என்பது வேறு. பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது அதிகமாக அழுதவர் அறிஞர் அண்ணா என்று கூறுவார்கள்.
அமெரிக்காவுக்கு அண்ணா செல்லும்போது நிக்சன் அவரை சந்திக்கவில்லை. அதன்பின்னர், நிக்சன் இந்தியா வரும்போது காமராசரை சந்திக்க விரும்பிய போது, அண்ணாவை சந்திக்க விரும்பாத ஒருவரை நான் ஏன் சந்திக்க வேண்டும் என்று காமராசர் கேட்டார்" என்றார்.
இதில், காமராசர் 1975 ஆம் ஆண்டில் தான் உயிரிழந்தார். ஆனால் அண்ணா 1969 ஆம் ஆண்டிலேயே உயிரிழந்து விட்டார். இவ்வாறு இருக்கையில் காமராஜர் இறந்தபோது அண்ணா எப்படி அழுதிருக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |