அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் செருப்பு அணிய முடியாது: அமைச்சர் பேச்சு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் செருப்பு அணிய முடியாது என்று தமிழக அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார்.
அமைச்சர் பேசியது
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்துவதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் எனவும் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று கோவையில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே வந்த அண்ணாமலை தன்னை தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.
இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "ஒருவருக்கு சாட்டையடி கொடுப்பது தண்டனை அல்லது பாவ விமோசனம் தான்.
எனவே, செய்த தவறுக்காக பாவ விமோசனத்திற்காக சாட்டை அடித்துக் கொண்டாரா, இல்லை அண்ணாமலை செய்த தவறுக்காக தன்னை தானே அடித்துக் கொண்டாரா என்பது கேள்வி தான். அவருக்கு திமுக அரசு எந்த பாதகமும் செய்யவில்லை.
பாஜகவில் பழனி யாத்திரை செல்வதற்காக 40 நாள் செருப்பு அணியாமல் இருப்பார்கள். அதனை தான் அண்ணாமலை கடைபிடித்து வருகிறார். அவர் திமுகவை அகற்றுவேன் என கூறினால், வாழ்நாள் முழுவதும் செருப்பு அணிய முடியாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |