கோமாளியாக இருக்கிறார்.., அண்ணாமலை சாட்டையடி குறித்து எஸ்.வி.சேகர் விமர்சனம்
தமிழக அரசை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை தானே அடித்துக் கொண்ட நிலையில் எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.
எஸ்.வி.சேகர் விமர்சனம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்துவதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் எனவும் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று கோவையில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே வந்த அண்ணாமலை தன்னை தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.வி.சேகர் பேசுகையில், "நான் இதுவரை நடித்த சினிமாவில் என்னை நானே சவுக்கால் அடித்ததில்லை. ஆனால் அரசியலே தெரியாத ஒருவர் கோமாளியாக இருக்கிறார் என்றால் அது அண்ணாமலைதான்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் சவுக்கால் எதற்கு அடிக்க வேன்டும்? அவர் தான் பொறுப்பா? இதை பைத்தியக்காரத்தனம், கோமாளித்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.
அண்ணாமலையை பாஜக தலைவர்கள் தான் தன்னை சவுக்கால் அடித்துக்கொள்ள வேண்டும். நல்ல வேளை நான் பாஜகவில் இருந்து விலகிவிட்டேன். அண்ணாமலையின் அரசில் பூஜ்ஜியம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |