அண்ணாமலை நடைபயணம் திடீரென ஒத்திவைப்பு: என்ன காரணம்?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற இருந்த 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
அண்ணாமலை நடைபயணம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள் யாத்திரை' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 168 நாட்களில் பாதயாத்திரையை மேற்கொள்ளும் அண்ணாமலை சென்னையில் நிறைவு செய்கிறார்.
இந்த பாத யாத்திரையை கடந்த ஜூலை 28 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது இருந்து அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
நடைபயணம் ஒத்திவைப்பு
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நான்காவது நாளாக மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற இருந்த நடைபயணத்தை அக்டோபர் 4 ஆம் திகதி ஒத்திவைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "நாளை இஸ்லாமியர்கள் கொண்டாடும் மீலாது நபி பண்டிகை. மேட்டுப்பாளையத்தில் நாளை மீலாது நபி ஊர்வலம் மற்றும் நமது நடைபயணத்தால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று, மேட்டுப்பாளையத்தில் நாளை நடைபெறவிருந்த நமது என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 4 -ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |