சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது! முதலமைச்சர் ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்: அண்ணாமலை
நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், முதலமைச்சர் ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமது பிறந்தநாள் வேண்டுகோளாக தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கும் மொழிப்போர் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனைகளை எதிர்கொள்வதால், மக்களிடம் இதன் உண்மையான நோக்கத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என தொண்டர்களிடம் கோரிக்கை வைப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஒரே இலக்கு!
— M.K.Stalin (@mkstalin) February 28, 2025
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!#FairDelimitationForTN pic.twitter.com/zQ1hMIHGzo
இந்த வீடியோவை குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், தமிழக முதல்வர் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஷூட்டிங் நடத்துகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்வளவு சீக்கிரம் முடியுமென கனவிலும் நினைக்கவில்லை: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாளின் பதிவு
அவர் தனது பதிவில், "மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒருபுறம் ஒட்டுமொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே?
மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களைக் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்?" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |