பிரித்தானியர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
அதிகரித்துவரும் குளிர் தொடர்பில், பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
இந்த மாதம், 7.20 மணிக்கு சூரியன் மறைகிறது. ஆனால், அடுத்த மாதத்திலிருந்து சீக்கிரமாகவே சூரியன் மறைந்துவிடும்.
ஆகவே, மக்கள் தங்கள் வீடுகளிலுள்ள திரைச்சீலைகளை (curtains) மாலை 4.30 மணிக்கே மூடிவிடுமாறு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.
சில ஆலோசனைகள்
வயதானவர்கள் மற்றும் உடல் நல பாதிப்புகொண்டவர்கள், தங்கள் வீடுகளினுள் வெப்பநிலை குறைந்தபட்சம் 18 டிகிரி செல்ஷியஸாவது இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டுமென எச்சரிக்கப்படுகிறார்கள்.
வீடுகளுக்குள் வெப்பம் அதிகரிக்கும் வகையில், மாலையில் சீக்கிரமாகவே வீட்டிலுள்ள திரைச்சீலைகளை மூடிவிடுவதுடன், தேவைப்படும்போது இயக்குவதற்கு வசதியாக, ரேடியேட்டர்களை மூடிவைக்கவேண்டாம் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறை குளிரடையாமல் தவிர்ப்பதற்காக, இரவு நேரங்களில் குளியலறையின் ஜன்னல்களை மூடிவைக்குமாறும், வயதானவர்கள் குளிர் தாங்கும் வகையிலான உடைகள் மற்றும் போர்வைகளை தயாராக வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன், குளிரான நேரங்களில் படுக்கையறையின் ஜன்னல்களை மூடிவைக்குமாறும் ஆலோசனை வானிலை ஆராய்ச்சி மையம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |