உலகின் மிக கொடூரமான சிறை: விலங்குகளைப் போல் அடைக்கப்படும் குற்றவாளிகள்!
எல் சால்வடார் என்ற நாட்டில் உள்ள பிரமாண்டமான சிறையில் மேலும் 2000 கைதிகளை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உலகின் மிக மோசமான சிறை
எல்சால்வடார் ஜனாதிபதி நயிப் புகேலே தனது நாட்டில் நடக்கும் வன்முறையைத் தடுப்பதற்காகப் புதிதாகச் சிறைச்சாலை ஒன்றை கட்டினார். அதில் ஏற்கனவே 2000 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
@Getty Images
தற்போது மேலும் புதிதாய் 2000 கைதிகள் அதில் இணைந்துள்ளனர். உலக மனிதநேய அமைப்பு இதனை எதிர்த்த போதிலும், அவர்கள் மேலும் புதிதாக 2000 சிறை கைதிகளை விலங்குகளைப் போல், கை மற்றும் கால்களுக்கு விலங்கிட்டு அழைத்துச் செல்லும் புகைப்படத்தை,அந்நாட்டின் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
வன்முறையான நாடு
எல்சால்வடார் நாட்டில் தான் உலகிலேயே அளவிற்கு அதிகமாக வன்முறை நடப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் ரவுடிகள் கும்பலாகச் சேர்ந்து புது புது குழுக்களை உருவாக்கி கொலை, கொள்ளை போன்ற பல சேட்டைகள் செய்து வந்துள்ளனர்.
@Getty Images
இதனால் இக்குற்றங்களைச் செய்யும் "போர்" MS-13 மற்றும் 18 ரவுடி கும்பல்களை அந்நாட்டுக் காவல்துறை குறி வைத்து பிடிக்கிறது. வெறுங்காலுடன், உடம்பெல்லாம் பச்சை குத்தப்பட்டு, மொட்டை அடித்த தலையுடன் கைகளில் விலங்குகளோடு ஆட்டு மந்தை போல் குற்றவாளிகளை காவல் அதிகாரிகள் சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
@Getty Images
இதனை வீடியோவாக ஜனாதிபதி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். ஆண்கள் பெரிய குழுக்களாக தங்கள் அறைகளுக்குள் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு இதேபோல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளனர், அங்கு மெத்தைகள் எதுவும் தெரியாமல் அடுக்கப்பட்ட உலோக படுக்கைகளுக்கு முன் தரையில் அமர்ந்து கொள்கிறார்கள்.
@Getty Images
"இது குற்றவாளிகளின் புதிய வீடாக இருக்கும், அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக வாழ்வார்கள், இனி அவர்கள் மக்களுக்கு மேலும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது" என்று புகேல் கூறியுள்ளார்.
"நாங்கள் இந்த புற்றுநோயை சமூகத்திலிருந்து அகற்றுகிறோம்" என்று நீதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் குஸ்டாவோ வில்லடோரோ தெரிவித்துள்ளார் .

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.