ரஷ்யாவுடன் கைகோர்க்கும் மற்றொரு சர்வாதிகாரி: மேற்கத்திய நாடுகளுக்கு திகிலை கிளப்பியுள்ள செய்தி
மூன்றாம் உலகப்போரை நோக்கி உலகம் நகர்கிறதோ என எண்ணும் வகையில் பல சம்பவங்கள் உலகில் தொடர்சியாக நடந்துவருகின்றன.
ஆஸ்திரியா நாட்டின் அரியணையேறும் வரிசையிலிருந்தவரான Archduke Franz Ferdinand என்பவரை செர்பியா கொலை செய்தது.
ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக ஜேர்மனி களமிறங்க, செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்க, பின்னர் பிரான்ஸ், பிரித்தானியா, கனடா என வரிசையாக தத்தம் நட்பு நாடுகளுக்காக களமிறங்க, அப்படித்தான் முதல் உலகப்போரே துவங்கியது.
ரஷ்யாவுடன் கைகோர்க்கும் மற்றொரு சர்வாதிகாரி
அதாவது, ஒரு நாட்டுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடு கைகோர்க்க, போர் வலுவாகிக்கொண்டே சென்றது. அதேபோன்றதொரு சூழல் தற்போதும் மெல்ல உருவாகிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக, ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகள் உதவிகள் செய்துவருகின்றன.
அதைத் தொடர்ந்து, சீனா ரஷ்யாவுடன் கைகோர்க்க, உலகம் கொஞ்சம் அதிர்ந்தது. சீனா வெளிப்படையாக ரஷ்யாவுக்கு உதவவில்லையென்றாலும், உக்ரைன் ஊடுருவலை அந்நாடு கண்டிக்கவே இல்லை.
அதைத் தொடர்ந்து, ஈரான் ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் அனுப்பியுள்ளதாக வெளியான செய்தி பதற்றத்தை அதிகரித்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேல், தற்போது வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன் ரஷ்ய பாதுகாப்புத்துறை அலுவலரான Sergei Shoiguவை சந்தித்துள்ள விடயம் மேற்கத்திய நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
அமெரிக்கா, உக்ரைன் முதலான பல நாடுகள், கிம் உக்ரைன் ஊடுருவல் விடயத்தில் ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |