அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் ஒருவர் மரணம்... தீவிர விசாரணை துவக்கம்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பல மணி நேரத்துக்குப் பின் ஒருவர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, அவரது மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் தொடர்புள்ளதா என்பதை அறிய தீவிர விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் இறுதியில் கொரோனா தொற்று தாக்கிய அந்த நபருக்கு ஜனவரி 21ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்டு பல மணி நேரத்திற்குப்பின் அவர் உயிரிழந்தார். ஆகவே, பல உள்ளூர், மாகாண மற்றும் பெடரல் விசாரணை அமைப்புகள், அவரது மரணத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக விசாரணையைத் துவக்கியுள்ளன.
அவருக்கு போடப்பட்டது பைசர் தடுப்பூசியா மாடெர்னா தடுப்பூசியா என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.
ஆனால், கடந்த வாரம் மாடெர்னா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 10 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட பேட்ச் தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறு கலிபோர்னியா மாகாண தொற்று நோயியல் துறை நிபுணரான Dr. Erica S. Pan பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.