ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள்! மனமுடைந்து மரணித்த சார்லஸின் ரகசிய காதலி
சார்லஸ், இளவரசி டயானாவுடன் வாழும்போதே திருமணமான பெண்ணான கமீலாவுடன் தொடர்பிலிருந்ததை உலகம் அறியும். ஆனால், அதிகம் பேசப்படாத மற்றொரு இரகசியக் காதலி அவருக்கு இருந்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் பழகிய சார்லஸ்
இளவரசர் சார்லஸ் திருமணம் காதலித்தது கமீலாவை, திருமணம் செய்தது டயானாவை. கமீலா வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டாலும், ஒரு கட்டத்தில் மீண்டும் தங்களுக்கிடையிலான உறவை புதுப்பித்துக்கொண்டுள்ளனர் சார்லசும் கமீலாவும். இது உலகம் அறிந்த விடயம்.
ஆனால், திருமணமான கமீலாவுடன் இரகசிய உறவு வைத்திருந்த சார்லஸ், அதே காலகட்டத்திலேயே வேறொரு பெண்ணுடனும் பழகியுள்ளார். அந்தப் பெண்ணும் திருமணமானவர். அவரது பெயர் Dale Elizabeth Tryon. அந்த பெண்ணும் கமீலாவும், சார்லசை போட்டி போட்டுக்கொண்டு காதலித்துள்ளார்கள்!
Image: ExpressStar
Image: AFP
இதற்கிடையில் சார்லசுக்கும் டயானாவுக்கும் திருமணமாக, திருமணமான சார்லஸ் மீதும் காதல் குறையவில்லை Daleக்கு. சார்லஸ் மீதான காதலால், தன் மகனுக்கு சார்லஸ் என்றே பெயர் வைத்துள்ளார் Dale.
இந்த Daleக்கு, சார்லஸ், 'Kanga' என செல்லப்பெயர் வைத்துள்ளார். சார்லஸ் மீதான கண்மூடித்தனமான காதலால், தனது ஆடை வடிவமைப்பு நிறுவனத்துக்கு 'Kanga' என்றே பெயர் வைத்துள்ளார் Dale.
மனமுடைந்து மரணித்த இரகசிய காதலி
இப்படி இரண்டு பெண்களுடன் பழகி வந்த சார்லஸ், ஒரு கட்டத்தில், Daleஐ விட்டுவிட்டு கமீலாவுடன் தன் உறவைத் தொடர, மனமுடைந்து போயிருக்கிறார் Dale. இந்நிலையில், சிறுவயதில் தாக்கிய பயங்கர நோய் ஒன்று மீண்டும் தாக்க, 1993ஆம் ஆண்டு Daleஐ புற்றுநோயும் தாக்கியுள்ளது.
புற்றுநோய் சிகிச்சையின்போது, வலி மருந்துகளுக்கு அடிமையான Dale, அதற்காக சிகிச்சைக்கு சென்ற இடத்தில், மாடியிலிருந்த ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார். தன்னை யாரோ தள்ளிவிட்டதாக அவர் கூற, மற்றவர்களோ, அவர் தானே குதித்துவிட்டதாக கருதினார்கள்.
Image: Tim Graham Photo Library via Getty Images
கீழே விழுந்த Daleக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டு அவரது உடல் இடுப்புக்கு கீழே செயலிழந்துபோய்விட்டது. கணவர் அவரை மன நல மருத்துவமனைக்கு அனுப்பி, விவாகரத்துக்கு விண்ணப்பிக்க, தனிமையில் வாடிய Dale, அதற்குப்பின்பும் தனது சக்கர நாற்காலியில் சார்லசை பின்தொடர்ந்ததாக கூறப்படுவதுண்டு.
ஆனால், சார்லசோ, தனக்கும் Daleக்கும் நெருக்கமான நட்பு எதுவும் இல்லை என அறிக்கை விட, Daleஉடைய நிலைமை மோசமானது. 1997ஆம் ஆண்டு, இரத்தத்தில் தொற்று ஏற்பட்டு, தனது 50ஆவது பிறந்தநாளுக்கு முன்பே மரணமடைந்துவிட்டார்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், சில மாதங்கள் முன்புதான் இளவரசி டயானா கார் விபத்தில் உயிரிழந்திருந்தார் என்பதுதான்.
Image: mirrorpix