பிரித்தானியாவில் வெடிக்கும் கலவரம்: பொலிஸார் மீது நாற்காலிகளை தூக்கி எறிந்த குடியேற்ற எதிர்ப்பாளர்கள்!
பிரித்தானியாவில் குடியேற்ற எதிர்ப்பாளர்கள் பொலிஸார்கள் மீது நாற்காலியை தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தியதுடன் ஹோட்டலின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் அமைதியற்ற நிலை
பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறார்களுக்கான கோடைகால முகாமில் Axel Rudakubana என்ற 17 வயது பதின்பருவ சிறுவன் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்ததில் இருந்து நாடு முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் பிரித்தானியாவில் குடியேற்ற எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் ரோதர்ஹாமில்(Rotherham) உள்ள ஹோட்டலில் ஒன்றுக்குள் புகுந்து நாற்காலிகளை பொலிஸார் மீது தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தியதுடன், ஹோட்டலின் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தெறிந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது, கிளர்ச்சியாளர் மரக்கட்டைகள் மற்றும் நாற்காலிகள் ஆகியவற்றை ஹாலிடே இன் ஹோட்டல்(Holiday Inn Hotel) மீதும், அந்த கட்டிடத்தின் முன் அணி வகுத்து நின்ற பொலிஸார் மீது தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தினர்.
அத்துடன் ஹோட்டலுக்கும் தீ வைக்க முயற்சி செய்தனர், இதற்கிடையில் Middlesbrough பகுதியிலும் குடியேற்ற எதிர்ப்பாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸார் மீது தாக்குதல்
இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார், அவரை சக ஊழியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான இந்த ஹோட்டல், புலம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆனால் இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட வற்றை மூடுவதாக கடந்த கன்சர்வேட்டிவ் நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு யாரும் வசிக்கிறார்களா என்பது தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |