போரின் போது இஸ்ரேலுடன் நெருக்கம்... எதிர்ப்பு தெரிவித்த மைக்ரோசாப்ட் ஊழியர்கள் பணிநீக்கம்
காஸாவில் இஸ்ரேல் போரை நடத்தி வரும் நிலையில், அந்த நாட்டுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தை எதிர்த்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அலுவலகம் முற்றுகை
நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் நடந்த அத்துமீறலில் நடத்தை விதிகளை கடுமையாக மீறியதைத் தொடர்ந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அன்னா ஹாட்டல் மற்றும் ரிக்கி ஃபேமிலி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக குரல் அஞ்சல்களைப் பெற்றனர். செவ்வாயன்று நிறுவனத் தலைவர் பிராட் ஸ்மித்தின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பின்னர் கைது செய்யப்பட்ட ஏழு போராட்டக்காரர்களில் அவர்களும் அடங்குவர்.
மற்ற ஐந்து பேரும் முன்னாள் மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் என்றே கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு இனப்படுகொலை செய்வதற்குத் தேவையான கருவிகளை மைக்ரோசாப்ட் தொடர்ந்து வழங்கி வருவதால் இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் Azure என்ற மென்பொருளைப் பயன்படுத்தியே பாலாஸ்தீன மக்களை இஸ்ரேல் இனம்கண்டு படுகொலை செய்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இழப்பீடு வழங்க வேண்டும்
மட்டுமின்றி மைக்ரோசாப்ட் நிறுவனம் இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டித்து, பாலஸ்தீனியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரியுள்ளனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் செய்த எண்ணற்ற மொபைல் போன் அழைப்புகளின் பதிவுகளை சேமிக்க இஸ்ரேலிய இராணுவ கண்காணிப்பு நிறுவனம் மைக்ரோசாப்டின் Azure மென்பொருளைப் பயன்படுத்துவதாக கூட்டு ஊடக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, பாலஸ்தீனியர்களின் விரிவான கண்காணிப்புக்காக மைக்ரோசாப்ட் கிளவுட் சேவையை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அம்பலமானதும், ஒரு மதிப்பாய்வு முன்னெடுக்கப்படும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது.
காஸா மீதான இஸ்ரேலின் போர் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்றதுடன், பசி நெருக்கடியை ஏற்படுத்தியது. காஸாவின் முழு குடிமக்களையும் உள்நாட்டிலேயே இடம்பெயர செய்தது மற்றும் சர்வதேச நீதிமன்றங்களில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |