அரச முடியாட்சிக்கு எதிர்ப்பு: ராணியின் மரணத்தை குறிக்கும் சவப்பெட்டியை ஆற்றில் வீசிய போராட்டக்காரர்கள்
பிரித்தானிய மகாராணியின் இறப்பைத் தொடர்ந்து அயர்லாந்தில் போராட்டம்.
“RIP British Empire” என எழுதப்பட்ட சவப்பெட்டியை ஆற்றில் வீசிய போராட்டக்காரர்கள்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, அயர்லாந்தில் அரச முடியாட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில், ராணியின் மறைவை குறிக்கும் வகையில் சவப்பெட்டியை போராட்டக்காரர்கள் ஆற்றில் வீசினர்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 9ம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்கு செப்டம்பர் 19ம் திகதி பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் நேற்று நடைபெற்றது.
Twitter
இந்நிலையில் பிரித்தானிய அரசாங்கத்தின் முடியாட்சியை எதிர்த்து, அயர்லாந்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில், ராணியின் மறைவை குறிக்கும் வகையில் சவப்பெட்டி மீது “RIP British Empire” என எழுதி போராட்டக்காரர்கள் ஆற்றில் வீசினர்.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு லண்டனில் நடைபெற்ற அதே நேரத்தில், அயர்லாந்து தலைநகர் டப்ளினில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை குழு பிரித்தானிய மன்னராட்சிக்கு எதிரான போராட்ட அணிவகுப்பை நடத்தினர்.
Twitter
இந்த போராட்டத்தில், அயர்லாந்தின் மன்னராட்சிக்கு எதிரான போராட்டக்காரர்கள் “RIP British Empire” என எழுதப்பட்ட சவப்பெட்டியை O'Connell தெருவில் உள்ள Liffey ஆற்றில் வீசினர்.
மறைந்த ராணியின் கொள்ளுப் பாட்டியான விக்டோரியா மகாராணி இந்த நகரத்திற்கு விஜயம் செய்த போது 1897 ஆம் ஆண்டு டப்ளினில் முன்னாள் சோசலிஸ்ட் தலைவர் ஜேம்ஸ் கொனொலி இதைப்போன்ற போராட்டத்தை நடத்தினார்.
Twitter
இந்த போராட்டமானது பெரெஸ்ஃபோர்ட் பிளேஸில் உள்ள ஜேம்ஸ் கொனொலி சிலையில் தொடங்கி, GPO வரை எதிர்ப்பு அணிவகுப்பை நடைபெற்றது.
கூடுதல் செய்திகளுக்கு; ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு விழா: இளவரசர் லூயிஸ் பங்கேற்காதது ஏன்?
மேலும் போராட்டத்தில் நீங்கள் பிரிட்டிஷ் கிங் என்று சொல்கிறீர்கள், நாங்கள் கில்லட்டின் என்று சொல்கிறோம்" மற்றும் "இப்போது பிரிட்ஸை வெளியேற்றுங்கள்!" போன்ற கோஷங்கள் தெரிவித்தவாறு அணிவகுத்துச் சென்றனர்.