ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு விழா: இளவரசர் லூயிஸ் பங்கேற்காதது ஏன்?

London Queen Elizabeth II Prince Harry Prince William King Charles III
By Thiru Sep 20, 2022 07:54 AM GMT
Report

ராணியின் இறுதிச் சடங்கில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நேற்று நடைபெற்றது.

இளவரசர் லூயிஸ் ஏன் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை என விளக்கம்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு விழாவிற்கு இளவரசர் ஜார்ஜ் மற்றும் சார்லோட் பங்கேற்ற போது இளவரசர் லூயிஸ் மட்டும் ஏன் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவை 70 ஆண்டுகள் ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 9ம் திகதி தனது 96வது வயதில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு விழா: இளவரசர் லூயிஸ் பங்கேற்காதது ஏன்? | Why Prince Louis Isnt Queens Funeral In LondonGetty Images

இதில் அரச குடும்ப உறுப்பினர்கள், உலக தலைவர்கள் மற்றும் உலக பிரபலங்கள் என மொத்தம் 2000 பேர் கலந்து கொண்டனர்.

இதைப்போல ராணியின் இறுதிச் சடங்கில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் இருவரின் மூத்த குழந்தைகளான  இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட் இருவரும் கலந்து கொண்டு ராணியாகிய தங்களது பாட்டிக்கு இறுதி விடை கொடுத்தனர்.

ஆனால் ராணியின் இறுதிச் சடங்கில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட்டின் இளைய குழந்தையாகிய இளவரசர் லூயிஸ் மட்டும் பங்கேற்கவில்லை.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு விழா: இளவரசர் லூயிஸ் பங்கேற்காதது ஏன்? | Why Prince Louis Isnt Queens Funeral In LondonGetty Images

இது தொடர்பான கேள்விகள் பிரித்தானியாவில் தொடர்ந்து வெளிவந்த நிலையில், மெயில் பத்திரிகையிடம் பேசிய ஆதார நபர் ஒருவர், ராணியின் இறுதிச் சடங்கு விழாவில் குழந்தைகளை சேர்ப்பது குறித்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் தம்பதியினர் “நீண்ட மற்றும் கடினமாக" யோசித்ததாக தெரிவித்துள்ளார்.

இறுதியில், இளவரசர் ஜார்ஜ் மற்றும் சார்லோட் கடந்த ஆண்டு தங்கள் தாத்தா இளவரசர் பிலிப்பின் நினைவில் கலந்து கொண்டு இருந்ததால், அதே முறையிலான நிகழ்வுகளில் இருவரும் அனுபவம் பெற்று இருந்தனர், ஆனால் இளவரசர் லூயிஸ் மிகவும் சிறியவர் என்று இளவரசர் வில்லியம் முடிவு செய்தார் என தெரிவித்துள்ளார்.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு விழா: இளவரசர் லூயிஸ் பங்கேற்காதது ஏன்? | Why Prince Louis Isnt Queens Funeral In LondonPA

இதனை தொடர்ந்தே ஜார்ஜும் சார்லோட்டும் தங்கள் பெற்றோருடன் காரில்  வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்குப் பயணம் செய்தனர். 

அவர்கள் வந்தவுடன், வில்லியம் சவப்பெட்டியின் பின்னால் கிங் சார்லஸ் மற்றும் இளவரசர் ஹாரியுடன் ஊர்வலத்தில் சென்றனர்.

கூடுதல் செய்திகளுக்கு; மேகன் மார்க்கலை வெறுப்பதற்கான வினோத காரணங்கள்: பிரித்தானியர்களை கேலி செய்த அமெரிக்க பத்திரிகை

இளவரசர் லூயிஸ்-சை அரச குடும்பத்தின் செவிலித்தாய் கோட்டையில் Maria Teresa Turrion Borrallo கவனித்து கொண்டிருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US