மேகன் மார்க்கலை வெறுப்பதற்கான வினோத காரணங்கள்: பிரித்தானியர்களை கேலி செய்த அமெரிக்க பத்திரிகை
மேகன் மார்க்கலை வெறுப்பதற்கான வினோத காரணங்கள் வெளியிட்டு அமெரிக்க பத்திரிகை கேலி.
மேகன் கவனத்தை ஈர்ப்பது போல் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டுடன் #GoHomeMeghanMarkle என்ற ஹேஷ்டேக் வைரல்.
மேகன் மார்க்கலை வெறுப்பதற்கான வினோதமான காரணங்களை பட்டியலிட்டு அமெரிக்க பத்திரிகை பிரித்தானியாவை கேலி செய்துள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹாரி அமெரிக்க பெண்ணான மேகன் மார்க்கலை திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து, தனது அரச பதவிகள் அனைத்திலிருந்தும் வெளியேறி இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு இளவரசர் ஹாரி குடிபெயர்ந்தார்.
Getty Images
இவை அரச குடும்பத்தில் பல்வேறு முரண்பாட்டை ஏற்படுத்தியதுடன், ராணி மற்றும் ராயல் குடும்பத்தின் வெறுப்பிற்கு (டச்சஸ் ஆஃப் சசெக்ஸில்) மேகன் மார்க்கல் மற்றும் இளவரசர் ஹாரி தம்பதி உள்ளானார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, துக்க நிகழ்வில் பங்கேற்ற இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கலை தம்பதி பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
இதையடுத்து அமெரிக்க பத்திரிகை ஒன்று மேகன் மார்க்கலை வெறுப்பதற்கான விசித்திரமான காரணங்களை பட்டியலிட்டு பிரித்தானியாவை கேலி செய்துள்ளது.
Getty Images
வாழ்க்கை, கலாச்சாரம், அரசியல் தொடர்பான பத்திரிகையான தி கட், பிரித்தானியர்களுக்கு மேகன் மார்க்கல் மீது தவறுதலான பைத்தியம் பிடித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ராணியின் மறைவை தொடர்ந்து இளவரசர்கள் வில்லியம், ஹாரி மற்றும் இளவரசிகள் கேட், மேகன் ஆகிய நால்வரும் இணைந்து இருந்தாலும், ராணிக்கு மிகவும் வலியை ஏற்படுத்திவிட்ட பிறகு, தற்போது மேகன் கவனத்தை ஈர்ப்பது போல் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டுடன் #GoHomeMeghanMarkle என்ற ஹேஷ்டேக்-கை ட்விட்டரில் பிரபலமடைய செய்தனர் என்றும், அதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் வின்ட்சர் கோட்டையில் துக்கம் அனுசரிப்பவர் வழங்கிய பூங்கொத்தை, மேகன் மார்க்கல் வைத்திருப்பதற்கு பல பிரித்தானியர்கள் மகிழ்ச்சியடையவில்லை என அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
Getty Images
அத்துடன் வின்ட்சர் கோட்டைக்கு வெளியே தோன்றிய போது மேகன் உடை குறித்தும் பிரித்தானிய மக்கள் வருத்தமடைந்தாகவும், அதே சேவையின் முடிவில் மேகனும் ஹாரியும் கையை பிடித்ததற்கு, ட்வீட்டரில் சிலர் பொறுத்தமற்றது மற்றும் மரியாதை குறைவானது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று வின்ட்சர் கோட்டைக்கு வெளியே கூடியிருந்த கடந்த சனிக்கிழமையன்று வின்ட்சர் கோட்டைக்கு வெளியே கூடியிருந்த துக்கக்காரர்களுடன் மேகன் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது, பல பெண்கள் அவளுடன் ஈடுபட மறுத்து, கண்களைத் தவிர்ப்பதற்காக கீழே பார்த்தார்கள் மற்றும் மேகனின் கையை கைநீட்ட போது அவர் கையை புறக்கணித்தார்கள்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய மக்களின் அன்பு மனதை தொட்டுவிட்டது: நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த மன்னர் மூன்றாம் சார்லஸ்
இவ்வாறு மேகன் மார்க்கலை வெறுப்பதற்கான பல காரணங்களை அமெரிக்க பத்திரிகையான தி கட் வெளியிட்டு, பிரித்தானியர்களை கேலி செய்து வருகிறது.