பிரித்தானிய மக்களின் அன்பு மனதை தொட்டுவிட்டது: நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த மன்னர் மூன்றாம் சார்லஸ்
பிரித்தானிய மக்களின் அளவுக்கு அதிகமான அன்பு ராயல் குடும்பத்தின் மனதை தொட்டுவிட்டது.
உங்கள் நம்பிக்கையை நான் என்றென்றும் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவிப்பு.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி துக்க உரையில் பேசிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரித்தானிய மக்களின் அன்பு மனதை ஆழமாக தொட்டுவிட்டது என உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்று கொண்டார்.
இதனை தொடர்ந்து நான்கு பிரித்தானிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ராணியின் துக்க அனுசரிப்பில் பொது மக்களுடன் இணைந்து பங்கேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாட்டு மக்களுடன் இணைந்து ராணிக்கு இறுதி துக்க மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் மன்னர் மூன்றாம் சார்லஸ் உரையாற்றினார்.
அதில், நாட்டு மக்களின் அளவற்ற அன்பு ராயல் குடும்பத்தின் மனதை தொட்டுவிட்டதாக மன்னர் மூன்றாம் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 10 நாட்களாக நானும் எனது மனைவி கமீலாவும் பிரித்தானிய நாட்டு மக்களிடம் இருந்தும், உலகின் பல பகுதிகளில் இருந்தும் ராணியின் இறப்பிற்கு பெற்ற ஆறுதல் மற்றும் ஆதரவு மனதை தொட்டு விட்டதாக தெரிவித்தார்.
லண்டன், எடின்பர்க், ஹில்ஸ்பரோ மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களில் எனது அன்பான அம்மாவின் வாழ்நாள் சேவைக்கு வந்து அஞ்சலி செலுத்த சிரமப்பட்ட அனைவராலும் நாங்கள் அளவிட முடியாத அளவுக்கு நெகிழ்ச்சி அடைந்தோம் எனத் தெரிவித்தார்.
மேலும் ராணிக்கு நாங்கள் இறுதியாக பிரியாவிடை சொல்ல தயாராகும் போது, எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஆதரவு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன் என மன்னர் மூன்றாம் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து பேசிய போது, உங்கள் மக்கள் தங்கள் அன்பையும் மரியாதையும் பல வழிகளில் காட்டுகிறார்கள், நீங்கள் அவர்களின் மரியாதையை மதிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும், "உங்கள் அறிவையும் ஞானத்தையும் எல்லையோ அல்லது கட்டுப்பாடோ இல்லாமல் நான் கண்டேன். உங்கள் நுண்ணறிவு, அறிவுரை மற்றும் நகைச்சுவையை நான் இழக்கிறேன்.
கூடுதல் செய்திகளுக்கு; ராணியின் நீல நிற கண்கள் மற்றும் புன்னகை மறக்க முடியாதது: மக்களுக்கு குயின் கன்சார்ட் கமீலா அஞ்சலி உரை
அம்மா, உங்கள் மகன் மீதான உங்கள் அன்பு, உங்கள் கருணை, உங்கள் அக்கறை, உங்கள் நம்பிக்கையை நான் என்றென்றும் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.