ராணியின் நீல நிற கண்கள் மற்றும் புன்னகை மறக்க முடியாதது: மக்களுக்கு குயின் கன்சார்ட் கமீலா அஞ்சலி உரை
இரவு BBC1 இல் மில்லியன் கணக்கானோர் காணும் நிகழ்ச்சியில் குயின் கன்சார்ட் கமீலா உரை.
ராணியின் கண்கள் மற்றும் புன்னகை மறக்க முடியாதது என நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் கமீலா.
ராணியின் அற்புதமான நீல நிற கண்கள் மற்றும் அழகான புன்னகையை மறக்க முடியாதது என பிரித்தானியாவின் குயின் கன்சார்ட் நாட்டு மக்களுக்கான தனது இதயப்பூர்வமான முதல் அஞ்சலியில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணியின் இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய இறுதிச் சடங்கு செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வைத்து நடைபெற உள்ளது.
Getty Images
இந்நிலையில் இரவு BBC1 இல் மில்லியன் கணக்கானோர் காணும் நிகழ்ச்சிக்காக குயின் கன்சார்ட் கமீலா, ராணி இரண்டாம் எலிசபெத் குறித்து தனது முதல் இதயப்பூர்வமான நினைவு அஞ்சலியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் சக்தி வாய்ந்த ஆண்களின் உலகில் தனிப்பெண்ணாக மிகவும் கடினமாக இருந்த போதிலும், உலகெங்கிலும் ராணியின் சாதனைகள் பாராட்டுக்களுக்கு உரியது என தெரிவித்தார்.
Getty Images
மேலும் ராணி எலிசபெத் இல்லாத நேரத்தை தன்னால் நினைவில் கொள்ள முடியாது என்று கமீலா தெரிவித்துள்ளார். அத்துடன் ஆட்சியில் தனது சொந்த பாத்திரத்தை செதுக்கியதற்காக பிரித்தானிய மகாராணி எலிசபெத்தை கமீலா பாராட்டினார்.
கமீலா தனது சொந்த நினைவுகளைத் தொடும் வகையில், ராணிக்கு அற்புதமான நீல நிற கண்கள் மற்றும் ராணி சிரிக்கும் போது அவருடைய முழு முகமும் ஒளிரும் எனவும், அவளுடைய புன்னகையை நான் எப்போதும் நினைவில் கொள்வேன், அந்த புன்னகை மறக்க முடியாதது.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு: ராணியின் இறுதிச் சடங்கு விழாவில் பங்கேற்கும் 100 நாடுகளின் தலைவர்கள்: பிரித்தானியா வந்தடைந்தார் ஜோ பைடன்
ராணிக்கும், கமீலாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், சமீபத்தில் தான் பதற்றங்கள் தணிந்து சுமுக உறவு படர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.