ராணியின் இறுதிச் சடங்கு விழாவில் பங்கேற்கும் 100 நாடுகளின் தலைவர்கள்: பிரித்தானியா வந்தடைந்தார் ஜோ பைடன்
ராணி எனது தாயை நினைவூட்டுகிறார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சு.
ராணியின் இறுதிச் சடங்கு விழாவில் கலந்து கொள்ள 100 நாடுகளின் தலைவர்கள் பிரித்தானியா வருகை
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் இருவரும் லண்டனுக்கு வருகை தந்துள்ளனர்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 9ம் திகதி வியாழக்கிழமை ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்ததை அடுத்து அவரது இறுதிச் சடங்கு செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
US President Joe Biden has arrived in the UK ahead of the Queen's funeral on Monday.
— Sky News (@SkyNews) September 17, 2022
The president and his wife will pay their respects to the monarch on Sunday as her coffin lies in Westminster Hall.
Latest: https://t.co/8AFWhoW82a pic.twitter.com/JdfgevwuUq
அமெரிக்கா, கனடா, இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் உட்பட 100 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.
அந்த வகையில் திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபே (westminster abbey) வைத்து நடைபெற உள்ள ராணியின் இறுதிச்சடங்கு விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் இருவரும் பிரித்தானிய வந்தடைந்துள்ளனர்.
Sky News
ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரித்தானிய மகாராணியின் பூத உடல் வைக்கப்பட்டுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.
அதனை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் இருவரும் மன்னர் சார்லஸ் வழங்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன், அதிகாரப்பூர்வ இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sky News
திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் இறுதிச் சடங்கை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாஷிங்டனுக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கிற்கு வருகை புரிந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ராணி தனது தாயை நினைவூட்டுவதாக தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு; ராணி நிச்சயமாக இதனை நம்பி இருக்க மாட்டார்: பொதுமக்களிடம் நெகிழ்ச்சியடைந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம்
Sky News
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் இறுதியாக கடந்த 2021ம் ஆண்டு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை வின்ட்சர் கோட்டையில் தேநீர் விருந்தில் சந்தித்தனர்.
ராணி இரண்டாம் எலிசபெத் இதுவரை 14 அமெரிக்க ஜனாதிபதிகளில் 13 பேரை சந்தித்துள்ளார்.