ராணி நிச்சயமாக இதனை நம்பி இருக்க மாட்டார்: பொதுமக்களிடம் நெகிழ்ச்சியடைந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம்
30 மணி நேரமாக ராணிக்கு அஞ்சலி செலுத்த காத்து இருப்பதாக பெண் ஒருவர் இளவரசரிடம் தெரிவிப்பு.
ராணி இதனை நிச்சயமாக நம்பி இருக்க மாட்டார் என வேல்ஸ் இளவரசர் வில்லியம் பொதுமக்களிடம் உருக்கம்.
பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருந்த பொதுமக்களிடம் “ராணி இதனை நம்பி இருக்க மாட்டார்” இளவரசர் வில்லியம் உள்ளம் நெகிழ தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில்(Westminster Hall) வைக்கப்பட்டுள்ளது.
“She’d never believe this, honestly, she really wouldn’t.”
— Charlie Proctor (@MonarchyUK) September 17, 2022
The Prince of Wales says his grandmother, The Queen, wouldn’t believe how big the queue of people is to see her Lying-in-State. pic.twitter.com/K7KmdC4x1z
இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று லாம்பெத்தில் வரிசையில் நின்ற நூற்றுக்கணக்கான மக்களை சந்திப்பதற்காக பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் இருவரும் கோட்டையில் இருந்து வெளிவந்தனர்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் கூட்டத்தை காண வெளியே வரும் போதே , பொதுமக்கள் பலர் கைதட்டி ஆரவாரம் செய்ததோடு, பொதுமக்களில் பலர் கடவுள் ராஜாவை காப்பாற்றுங்கள், கடவுள் வேல்ஸ் இளவரசரை காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர்.
இதையடுத்து ராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்து இருந்த பொதுமக்களை இளவரசர் சந்தித்து எவ்வளவு நேரம் காத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த பெண் ஒருவர், தான் 30 மணி நேரமாக வரிசையில் நிற்பதாக தெரிவித்தார்.
மற்றொரு நபர் தான் செக் குடியரசில் இருந்து வந்ததாக தெரிவித்தார், இதற்கு உடனடியாக பதிலளித்த வேல்ஸ் இளவரசர் வில்லியம், நிச்சயமாக ராணி இதனை ஒருபோதும் நம்பி இருக்க மாட்டார் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு; சங்கத் தமிழிசைத் திருவிழா: திடீரென ஒலித்த இசைக்கு எழுந்து நடனமாடிய சீமான்!
ராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்திய இளவரசர் வில்லியம், நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்பது ஒரு பயங்கரமான விஷயம் என்று தெரிவித்தார்.