சங்கத் தமிழிசைத் திருவிழா: திடீரென ஒலித்த இசைக்கு எழுந்து நடனமாடிய சீமான்!
சங்கத் தமிழிசைத் திருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழங்கிய இசை நிகழ்ச்சியில் எழுந்து நடனமாடிய சீமான்.
சென்னையில் நடைபெற்ற சங்கத் தமிழிசைத் திருவிழா நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென எழுந்து நடனமாடியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் கலை மற்றும் இலக்கிய பண்பாட்டுப் பாசறை நடத்தும் தமிழோசை - சங்கத்தமிழ் இசைத் திருவிழா செப்டம்பர் 17-ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து நடைபெற்றது.
Watch | திடீரென ஒலித்த இசை.. எழுந்து நடனமாடிய சீமான்!
— Sun News (@sunnewstamil) September 18, 2022
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நடத்திய தமிழோசை - சங்கத் தமிழிசைத் திருவிழா நிகழ்ச்சியில் நடனமாடிய சீமான்#SunNews | #SeemanDance pic.twitter.com/avviCpuszc
தொல்காப்பியர் காலம் தொட்டு இசைக்கென்று தனி மரபைக் கொண்ட தமிழ் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழங்கினார்.
இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திடீரென எழுப்பப்பட்ட இசைக்கு எழுந்து நடனமாட தொடங்கினார்.
கூடுதல் செய்திகளுக்கு: மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு பேனா பரிசளித்த ரசிகர்: காரணத்தை உணர்ந்து சிரிப்பலையில் மூழ்கிய பொதுமக்கள்
இது அங்கிருந்த அனைவரையும் உற்சாகம் செய்ய வைத்ததுடன், இதுத் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.