மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு பேனா பரிசளித்த ரசிகர்: காரணத்தை உணர்ந்து சிரிப்பலையில் மூழ்கிய பொதுமக்கள்
மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு பேனாவை பரிசாக வழங்கி ரசிகர்.
காரணத்தை உணர்ந்து பொதுமக்களுடன் வெடித்து சிரித்த மன்னர் மூன்றாம் சார்லஸ்.
பிரித்தானிய மன்னரின் பேனா மை விபத்திற்கு பிறகு, அவரது நலன்விரும்பி ஒருவர், மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கு பேனா ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
அதனடிப்படையில் நாட்டின் நான்கு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், மன்னர் மூன்றாம் சார்லஸ் செவ்வாயன்று வடக்கு அயர்லாந்தில் கையெழுத்திடும் விழாவின் போது மை கசிந்த பேனாவால் விரக்தியடைந்தார்.
someone’s given Charles a pen ? #KingCharles pic.twitter.com/dPd9YoBfjL
— Royal Supporter ♔ (@FanCambridges) September 16, 2022
இதைப்போலவே பெல்ஃபாஸ்டுக்கு அருகிலுள்ள ஹில்ஸ்பரோ கோட்டையில் கேமராக்களுக்கு முன்னால் பார்வையாளர்களின் புத்தகத்தில் கையெழுத்திடும் போதும் அவர் பயன்படுத்திய பேனாவின் மை கசிந்து மன்னர் மூன்றாம் சார்லஸை வெறுப்படைய வைத்தது.
அப்போது மன்னர் மூன்றாம் சார்லஸ், "ஓ கடவுளே நான் இதை (பேனா) வெறுக்கிறேன்" என்று தெரிவித்ததுடன் எழுந்து நின்று பேனாவை தன் மனைவி மற்றும் ராணி துணைவியார் கமீலாவிடம் கொடுத்தார்.
அத்துடன் சார்லஸ் தன் விரல்களைத் துடைத்தபடி, "ஓ பார், இது எல்லா இடங்களிலும் போகிறது," என்று கமீலாவிடம் தெரிவித்தார். மேலும் இந்த பேனா மை கசிவு விஷயத்தை என்னால் தாங்க முடியாது, என்று சார்லஸ் மன்னர் விரக்தியடைந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி மிகப்பெரிய பேசு பொருளானது.
'Can’t bear this bloody thing … Every stinking time' — King Charles III expressed his frustration with a pen in the middle of a signing ceremony at Hillsborough Castle during his visit to Northern Ireland pic.twitter.com/4HyHK5StB1
— NowThis (@nowthisnews) September 13, 2022
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவின் கார்டிஃப் நகருக்கு விஜயம் செய்த மன்னர் மூன்றாம் சார்லஸ், அங்கு திரண்டு இருந்த பொதுமக்களிடம் கைகுலுக்கி சிறிய உரையாடல் நடத்தி வந்தார்.
அப்போது மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு அவரது நலன்விரும்பி ஒருவர் திடீரென பேனா ஒன்றை பரிசாக அளித்தார். ஆரம்பத்தில் குழப்பமடைந்த மன்னர் மூன்றாம் சார்லஸ், விரைவில் அதை உணர்ந்து கொண்டு வெடித்து சிரித்தார்.
அத்துடன் ரசிகரின் அன்புப் பரிசை ஏற்றுக்கொண்டு பேனாவை மன்னர் மூன்றாம் சார்லஸ் பார்த்தவுடன், அருகில் இருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கூடுதல் செய்திகளுக்கு: சுமார் 16 மில்லியன் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர்: பாகிஸ்தான் வெள்ளத்தை பார்வையிட்ட UNICEF பிரதிநிதி தகவல்
கசிந்த பேனாவுடன் விபத்து படம்பிடிக்கப்பட்ட பிறகு, மன்னர் மூன்றாம் சார்லஸின் நலன்விரும்பி அவருக்கு பேனாவைப் பரிசளித்தது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் ராயல் சப்போர்ட்டர் என்ற பயனர் வெளியிட்டுள்ளார்.