சுமார் 16 மில்லியன் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர்: பாகிஸ்தான் வெள்ளத்தை பார்வையிட்ட UNICEF பிரதிநிதி தகவல்
பாகிஸ்தான் வெள்ளத்தை பார்வையிட்டார் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் பிரதிநிதி அப்துல்லா ஃபாடில்.
பாகிஸ்தானின் சூப்பர் வெள்ளத்தால் 16 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத பயங்கர வெள்ளத்தில் சுமார் 1.6 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், மில்லியன் கணக்கான மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
AP
இந்நிலையில் வெள்ளம் பாதித்த சிந்து பகுதிகளை பார்வையிட்ட ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் (UNICEF) பிரதிநிதி அப்துல்லா ஃபாடில், (Abdullah Fadil) ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் மற்றும் பல வலிமிகுந்த தோல் நோய்களுடன் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தனது சமீபத்திய இரண்டு நாள் பயணத்தை முடித்த ஃபாடில், பெரும் வெள்ளத்தால் பாகிஸ்தானில் 528 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
AP
அத்துடன் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள சூப்பர் வெள்ளத்தால் சுமார் 16 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் 3.4 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அவசர உதவிகள் உடனடியாக தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: ராணியை காண காத்திருந்த பொதுமக்கள்: மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் இணைந்து வழங்கிய இன்ப அதிர்ச்சி
பாகிஸ்தானுக்கான சர்வதேச உதவிகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையிலும், வருத்தமான உண்மை என்னவென்றால் ஆதரவு மற்றும் உதவிகள் சரிவர கிடைக்காமல் பல குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை இழந்து வருவதாக எச்சரித்துள்ளார்.
AP