ராணியை காண காத்திருந்த பொதுமக்கள்: மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் இணைந்து வழங்கிய இன்ப அதிர்ச்சி
அஞ்சலி செலுத்த காத்திருந்த பொதுமக்களை இணைந்து சந்தித்த மன்னர் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம்.
கடவுள் ராஜாவை காப்பாற்றுங்கள், கடவுள் வேல்ஸ் இளவரசரை காப்பாற்றுங்கள் என பொதுமக்கள் ஆரவாரம்.
பிரித்தானிய மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காத்து இருந்த பொதுமக்களை மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் சந்தித்து ஆறுதல் பெற்றனர்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில்(Westminster Hall) வைக்கப்பட்டுள்ளது.
Sky News
இந்நிலையில் சனிக்கிழமையான இன்று ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காத்து இருந்த பொதுமக்களை சந்திப்பதற்காக மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் கோட்டையில் இருந்து வெளிவந்தனர்.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் லாம்பெத்தில் வரிசையில் நின்ற நூற்றுக்கணக்கான மக்களை சந்திப்பதற்காக வெளியே வந்தபோது பொதுமக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
Sky News
பொதுமக்களில் பலர், மன்னர் மற்றும் இளவரசருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், அவர்களுடன் ஓரிரு வார்த்தைகள் பேசி கைகுலுக்கி கொள்ளவும் ஆர்வமாக இருந்தனர்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் பொதுமக்களை கடந்து செல்லும் போது, “பலர் கடவுள் ராஜாவை காப்பாற்றுங்கள்” கடவுள் வேல்ஸ் இளவரசரை காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.
Sky News
மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது தாயார் மறைவின் உணர்ச்சிகரமான சூழ்நிலையிலும் பிரித்தானியா, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய யூனியனின் நான்கு மூலைகளுக்கும் விஜயம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ராணிக்காக மீண்டும் இணையும் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி: பிரித்தானிய வரத் தொடங்கிய உலக தலைவர்கள்
இருப்பினும் ராணியின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக தங்கள் பயண அட்டவணை சிறிது நிறுத்தப்பட்டதால் பொதுமக்களை சந்திப்பது தொடர்பான திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.